முகப்பு /செய்தி /இந்தியா / போராட்டத்தில் பூத்த காதல்.. அரசியல் பிரமுகரை கரம் பிடித்த பிரபல பாலிவுட் நடிகை!

போராட்டத்தில் பூத்த காதல்.. அரசியல் பிரமுகரை கரம் பிடித்த பிரபல பாலிவுட் நடிகை!

மணக்கோலத்தில் நடிகை ஸ்வரா பாஸ்கர்

மணக்கோலத்தில் நடிகை ஸ்வரா பாஸ்கர்

பிரபல பாலிவுட் நடிகையான ஸ்வரா பாஸ்கர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகரை திருமணம் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் பிறந்து வளர்ந்த நடிகை ஸ்வரா பாஸ்கர் 2009இல் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர் ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு, நீல் பட்டி சன்னாட்டா போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். திரைப்படம் மட்டுமல்லாது சமூக விஷயங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து ஒரு செயற்பாட்டாளராகவும் ஸ்வரா பாஸ்கர் திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்வரா பாஸ்கர் தற்போது சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஃபஹத் ஜிரார் என்பவரை திருமணம் செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஃபஹத் ஜிரார், அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிரா மாநில இளைஞர் அணித் தலைவராக உள்ளார். இவர் சிஏஏவுக்கு எதிரான போராட்டம், ஆரே காலனியில் மெட்ரோவுக்கா மரம் வெட்டப்படுவதற்கு எதிரான போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தின் போது தான் ஸ்வரா பாஸ்கர் மற்றும் ஃபஹத்துக்கு இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மலர்ந்த நிலையில், இருவரும் தற்போது திருமணம் செய்துள்ளனர். தனது திருமண நிகழ்வு குறித்து வீடியோ பதிவு ஒன்றை ட்விட்டர் மற்றும் இஸ்டா பக்கங்களில் நடிகை ஸ்வார வெளியிட்டுள்ளார்.

"சில நேரங்களில் உங்களுக்கு அருகிலேயே இருக்கும் ஒன்றை நீங்கள் தொலைவில் தேடுகிறீர்கள். நாங்கள் அன்பைத் தேடினோம், ஆனால் முதலில் நட்பைக் கண்டோம். பின்னர் எங்களுக்குள் ஒருவரையொருவர் கண்டுபிடித்தோம்! என் இதயத்திற்கு வருக ஃபஹத் ஜிரார் அகமத்!” என்ற குறுந்தகவலுடன் வீடியோ பதிவை ஸ்வரா வெளியிட்டுள்ளார்.

தாங்கள் முதல் முறையாக போராட்டத்தில் சந்தித்தது தொடங்கி, கணவரின் அரசியல் போராட்டம், தங்களின் தனிப்பட்ட சந்திப்புகள், ஷேர் செய்த பரிசுகள், செல்லப் பிராணிகள் போன்றவற்றை இணைத்து ஸ்வரா பாஸ்கர் வெளியிட்ட வீடியோ பதிவு இருந்தது. புதுமண தம்பதிக்கு பலரும் மணமார்ந்த வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Actress, Bollywood actress, CAA Protest, Marriage