ஹோம் /நியூஸ் /இந்தியா /

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து.. விலை அறிவிப்பு..!

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து.. விலை அறிவிப்பு..!

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

தனியார் சந்தை விலை 800 ரூபாய்க்கும், அரசு விநியோகத்துக்கான விலை 325 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

பிஎஃப். 7 வகை கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இதனையொட்டி மூக்குவழியாக செலுத்திக் கொள்ளும் பாரத் பயோடெக்கின் ‘இன்கோவாக்’ தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம் அனுமதி வழங்கியது.

அதன் தொடர்ச்சியாக ஜனவரி 26ம் தேதி, ‘இன்கோவாக்’ தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனத் தலைவர் கிருஷ்ணா எல்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.முன்னதாக இன்கோவாக் மருந்தின் தனியார் சந்தை விலை 800 ரூபாய்க்கும், அரசு விநியோகத்துக்கான விலை 325 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இன்கோவாக் மருந்து உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Covid-19, Nasal Vaccine