முகப்பு /செய்தி /இந்தியா / மனிதக் கழிவை அகற்றும் நவீன ரோபோ... விஷ வாயுவையும் கண்டறியும்... கேரள அரசின் அசத்தல் ஐடியா..!

மனிதக் கழிவை அகற்றும் நவீன ரோபோ... விஷ வாயுவையும் கண்டறியும்... கேரள அரசின் அசத்தல் ஐடியா..!

ரோபோக்கள் மூலம் மனித கழிவுகளை அகற்றும் திட்டம்

ரோபோக்கள் மூலம் மனித கழிவுகளை அகற்றும் திட்டம்

நாட்டிலேயே முதல் முறையாக மனித கழிவுகளை ரோபோக்கள் மூலம் அகற்றும் திட்டத்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளி சுத்தம் செய்யும் அவலத்திற்கு எதிராக நீண்டகாலமாகவே சமூக போராட்டங்கள் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கழிவு நீர் தொட்டிகளில் இறங்கி தூய்மை செய்யும் பணியாளர்கள் பலர் விஷ வாயு தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

2017 தொடங்கி கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 352 தூய்மை பணியாளர்கள் கழிவு நீர் தொட்டியில் இறங்கி பணி செய்யும் போது விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறைக்கு தடை விதித்து மாற்று நடைமுறை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக முன்வைக்கப்படும் நிலையில், கேரளாவில் சிறப்பான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக மனித கழிவுகளை ரோபோக்கள் மூலம் அகற்றும் திட்டத்தை கேரளா அரசு அறிமுகம் செய்துள்ளது. அம்மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் இந்த திட்டத்தை மாநில நீர்வளத்துறை ரோஷி அகஸ்டீன் தொடங்கி வைத்தார். இந்த ரோபோவிற்கு பண்டிகூட் என பெயரிடப்பட்டுள்ளது. மனிதர்களை போன்றே கைகள், மூட்டு பகுதிகளை கொண்ட இந்த ரோபோ வாட்டர் ப்ரூஃப், பயர் ப்ரூஃப் தன்மை கொண்டது.

மேலும், ஏதேனும் விஷ வாயு இருந்தால் அதை கண்டறியும் விதமாக இதில் கேமரா மற்றும் சென்சார்களும் உள்ளன. தொழில்நுட்ப வசதிகள் மூலம் கழிவுகளை நீக்கி இந்த திட்டத்தை 100 நாள் செயல்திட்டமாக நடைமுறைப்படுத்த போவதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.

First published:

Tags: Kerala, Robo