India Toy Fair 2021: இந்தியாவின் முதல் பொம்மை கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

India Toy Fair 2021: இந்தியாவின் முதல் பொம்மை கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

பிரதமர் மோடி

இந்த முதல் பொம்மை கண்காட்சி ஒரு வணிக அல்லது பொருளாதார நிகழ்வு மட்டுமல்ல, நாட்டின் பழமையான விளையாட்டுகளின் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் இணைப்பு என்று பிரதமர் கூறினார்.

  • Share this:
இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும் பொம்மைகளின் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

ஆத்மநிர்பர் பாரதத்தை கட்டியெழுப்புவதற்கும், நாட்டின் பழமையான மரபுகளை வலுப்படுத்துவதற்கும் இந்திய பொம்மை கண்காட்சி ஒரு முக்கிய படியாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.

வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் நடைபெற்ற இந்திய பொம்மை கண்காட்சி 2021-யை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த முதல் பொம்மை கண்காட்சி ஒரு வணிக அல்லது பொருளாதார நிகழ்வு மட்டுமல்ல, நாட்டின் பழமையான விளையாட்டுகளின் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் இணைப்பு என்று பிரதமர் கூறினார். சிந்து பள்ளத்தாக்கு மற்றும் மொகஜ்ஜதரோவின் பொம்மைகள் குறித்து நாடு முழுவதும் உள்ள மக்கள் விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

உலகின் பிரபலமான செஸ் விளையாட்டு இந்தியாவில் தோன்றியது தான். செஸ் விளையாட்டை பண்டைய காலத்தில் இந்தியாவில் சதுரங்கம் என்ற பெயரிலும், லூடோ விளையாட்டை பச்சிஸி என்ற பெயரிலும் விளையாடி உள்ளனர். பொம்மைத் தொழிலில் இவ்வளவு பலம் மறைக்கப்பட்டுள்ளது, இந்த வலிமை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் மற்றும் ஆத்மநிர்பர் பாரத் பிரச்சாரத்தின் மூலம் தொழில்துறையின் அடையாளம் பலப்படுத்தப்படும்.

உள்ளூர் பொம்மைகள் குழந்தைகளிடையே ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துகின்றன என்று பிரதமர் மோடி பேசினார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாடுமாறு அவர் வலியுறுத்தினார், மேலும் குழந்தைகளின் கற்றல் செயல்பாட்டில் பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் பிரதமர் மோடி.

இந்தியாவின் பொம்மை கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கண்காட்சியாளர்கள் கடந்த பிப்ரவரி 11ம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள India Toy Fair 2021 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இணைய வழியிலான இந்த பொம்மை கண்காட்சியில் பங்கேற்பவர்களால் இந்திய பொம்மை சுற்றுச்சூழலின் பல்வேறு அம்சங்களைக் காண முடியும்.
Published by:Arun
First published: