Home /News /national /

கொரோனாவின் புதிய திரிபு ஒமைக்ரான் XE இந்தியாவில் ஒருவருக்கு உறுதி

கொரோனாவின் புதிய திரிபு ஒமைக்ரான் XE இந்தியாவில் ஒருவருக்கு உறுதி

Omicron XE Variant | ஜனவரி 19-ம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக இந்த புதிய மாறுபட்ட கொரோனா திரிபு கண்டறியப்பட்டது.

    இந்தியாவில் முதன்முறையாக கொரோனாவின் புதிய திரிபான ஓமைக்ரான் XE மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. புதிய திரிபான எக்ஸ்இ முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பல அலைகளை உருவாக்கியது. இந்தியாவில் கொரோனா முதல் அலைக்குபின் டெல்டா வைரஸின் இரண்டாவது அலை உருவானது. டெல்டா வைரஸ் தான் இந்தியாவில் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது.

    அதன்பின் ஒமைக்ரான் இந்தியாவில் 3-வது அலையை ஏற்படுத்தியது. ஒமைக்ரான் அதிகம் பரவினாலும் இதனால் உயிரிழப்பு என்பது குறைவாகவே இருந்தது. இதனால் ஒமைக்கரான் மார்ச் மாதத்தில் குறைந்து வந்தது. தற்போது ஒமைக்ரானின் புதிய வேரியண்ட் XE மும்பையில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஜனவரி 19-ம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக இந்த புதிய மாறுபட்ட கொரோனா திரிபு கண்டறியப்பட்டது. புதிய திரிபான எக்ஸ்இ முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இ்நதியாவில் 4-வது அலை உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி