Home /News /national /

25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை.. பதவியேற்றதுமே பம்பர் அறிவிப்பு வெளியிட்ட பஞ்சாப் முதல்வர்

25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை.. பதவியேற்றதுமே பம்பர் அறிவிப்பு வெளியிட்ட பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் அரசு

பஞ்சாப் அரசு

பஞ்சாப் மாநில தேர்தலில் ஆம் ஆத்மி தேர்தல் பரப்புரையின் போது முதன்மையாக முன்வைக்கப்பட்ட வாக்குறுதி, படித்த இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்; அதற்காக புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதுடன், காலியிடங்களும் நிரப்பப்படும் என்பது தான்.

மேலும் படிக்கவும் ...
    பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பக்வந்த்சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், இளைஞர்களுக்கு 25,000 அரசு வேலைகளை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

    பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 10ம் தேதி வெளியானது. இதில், காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மியைச் சேர்ந்த பக்வந்த்சிங் மான் முதலமைச்சராக பதவியேற்றார். புதிய அரசு அமைந்ததற்கு பின்னர் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில், 25 ஆயிரம் அரசு வேலையிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதில், 10 ஆயிரம் போலீஸ் பணியிடங்களும் அடக்கம். இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோவில் தகுதி அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். சிபாரிசு மற்றும் லஞ்சத்திற்கு இடம் கிடையாது. பாகுபாடு காட்டப்படாது என்று அவர் கூறியுள்ளார்.

    பஞ்சாப் மாநில தேர்தலில் ஆம் ஆத்மி தேர்தல் பரப்புரையின் போது முதன்மையாக முன்வைக்கப்பட்ட வாக்குறுதி, படித்த இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்; அதற்காக புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதுடன், காலியிடங்களும் நிரப்பப்படும் என்பது தான். இந்நிலையில்தான், தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல் கட்டமாக 25,000 அரசு வேலைகள் வழங்கப்படும். ஒரு மாதத்தில் இதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, ஆள் தேர்வு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Government jobs, Punjab

    அடுத்த செய்தி