இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எப்போது? வெறும் கண்களால் பார்க்கலாமா?

சந்திர கிரகணம்

இந்தியாவின் முக்கிய பகுதிகளில் இந்த நிகழ்வினை பார்க்கமுடியும்.

  • Share this:
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வருகிற மே 26ம் தேதி புதன்கிழமை ஏற்படவிருக்கிறது. இந்த நிகழ்வு அன்றைய தினம் மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரை மிக நீண்ட சந்திரகிரகணம் நடைபெறவிருக்கிறது. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் இந்த நிகழ்வினை பார்க்கமுடியும். சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும்.

இருப்பினும் சூரிய ஒளியாக பூமியின் மேல் வழியாக சற்று சிதறிய படி நிலவில் விழுவதால் அது சிவப்பு மற்றும் ஆரேஞ்ச் நிறத்தில் இருக்கும். அதன் மேல் இருக்கும் தூசி துள்களால் இந்த நிறம் தோன்றுவதுண்டு. இதனை ஆங்கிலத்தில் பிளட் மூன் ( குருதி நிலவு) என்று அழைப்பதுண்டு. சூரய கிரகணம் போன்று அல்லாமல் இதனை சாதாரண கண்களால் காணமுடியும். வானம் மேக மூட்டம் இல்லாமல் தெளிவாக இருக்கும் போது சந்திர கிரகணத்தை முழுமையாக காண முடியும்.

இதனை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கத்திய நாடுகள், தெற்கு அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா கடற்கறை, பசுபிக் கடல் போன்ர பகுதிகளில் இதனை காண முடியும். இந்த சந்திர கிரகணம் பௌர்ணமி தினத்தில் வரக்கூடும். ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படக்கூடும். ஜோதிட சாஸ்திரப்படி சந்திர கிரகணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன் படி சந்திர கிரகணத்தின் போது கூர்மையான பொருட்களை பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

மேலும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய தினங்களில் இந்து முறைப்படி மக்கள் கோயில் சென்று வழிபாடு நடத்துவது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இதனையடுத்து ஜூன் 10ம் தேதி முழு சூரிய கிரகணமும், நவம்பர் 19ம் தேதி பகுதி சந்திர கிரகணமும், டிசம்பர் 4ல் முழு சூரிய கிரகணமும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 2018, ஜனவரி 31ம் தேதி முழுமையான சந்திர கிரகணம் நடைபெற்றது. இது பெரு நீல குருதி நிலவு என்று அழைக்கப்பட்டது. இது போன்ற நிகழ்வு 19 வருடங்கள் கழித்து 2037ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி நடைபெறவிருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி நடைபெற்ற சந்திர கிரகணமானது, 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
Published by:Arun
First published: