Home /News /national /

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கியது

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கியது

அமர்நாத் யாத்திரை தொடங்கியது

அமர்நாத் யாத்திரை தொடங்கியது

இந்தாண்டு அமர்நாத் யாத்திரையானது இன்று தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    2022ஆம் ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கியது. இந்த யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஜம்முவில் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 717 யாத்திரிகர்கள் இந்த புனித யாத்திரைக்காக புறப்பட்டுள்ளனர். யாத்திரிகர்களுக்கு மத்திய ஆயுதப்படை மற்றும் உள்ளூர் காவல்துறை பாதுகாப்பு வழங்கி வருகிறது. அதேபோல், வானிலை மாற்றங்களுக்கு யாத்திரிகர்கள் பாதுகாப்பாக செல்ல வானிலை ஆய்வு மையமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் யாத்ரிகர்களுக்கு வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'நாட்டின் கலாசார அடையாளமாக இந்த அமர்நாத் யாத்திரை விளங்குகிறது. யாத்திரிகர்கள் அனைவருக்கும் சிறப்பான தரிசனமும், பாதுகாப்பான யாத்திரையும் கிடைக்க வாழ்த்துகள்' என்றார்.

    இந்தாண்டு அமர்நாத் யாத்திரையானது இன்று தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக யாத்திரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் யாத்திரை நடைபெறுகிறது.


    ஜம்மு காஷ்மீர் யாத்திரைக்கான முன்பதிவுகள் www.shriamarnathjishrine.com என்ற இணையதளத்தில் செய்யப்பட்டது. மேலும் யாத்திரிகர்கள் தங்குவதற்காக ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் தங்கும் விடுதி கட்டுப்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய புனித தலமான அமர்நாத் குகை, ஜம்மு காஷ்மீரின் லிட்டர் பள்ளத்தாக்கில் 12,756 அடி உயரத்தில் உள்ளது.

    இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் தேவேந்திர பட்னாவிஸ்?

    அமர்நாத் குகையில் உள்ள பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோயில் சக்தி பீடங்களுள் ஒன்றாகும். 2019ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரை சட்டப்பிரிவு 370 நீக்கத்தின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், இரண்டு ஆண்டுகள் கழித்து தான் இந்தாண்டுதான் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Home Minister Amit shah

    அடுத்த செய்தி