ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக இரண்டு திருநங்கைகளை நியமித்து, தெலங்கானா அரசு நாட்டின் முதன்முறையாக ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பை எடுத்துள்ளது.
ரூத் ஜான் பால் கொய்யாலா மற்றும் பிராச்சி ரத்தோர் ஆகிய இரு திருநங்கை டாக்டர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பே எம்பிபிஎஸ் படிப்பை முடித்து விட்டனர். ஆனால் மருத்துவமனைகளில் வேலை கிடைப்பதில் பாரபட்சத்தை எதிர்கொண்டு தாவீது வந்தனர்.
கம்மத்தைச் சேர்ந்த டாக்டர் ரூத், மல்லா ரெட்டி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 2018 இல் பட்டம் பெற்றுள்ளார். ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள 15 மருத்துவமனைகளால் நிராகரிக்கப்பட்டதாக ரூத் நியூஸ் 18 இடம் அவர் கூறினார். சமூகத்தின் பார்வையில், அடையாளத்தால் தன் தகுதி தாழ்ந்துவிட்டது. எனது அடையாளத்தின் காரணமாக தான் பல முறை நிராகரித்ததாக வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க : காற்று மாசால் 2 லட்சம் குழந்தைகளை இழந்த இந்தியா!
டாக்டர் பிராச்சி ரத்தோர் அடிலாபாத்தில் உள்ள RIMS கல்லூரியில் MBBS பட்டம் பெற்றார். 30 வயதான மருத்துவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் அவரது அடையாளம் தெரிந்த பிறகு மருத்துவமனையை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர். அதற்கு காரணமாக அந்த மருத்துவமனையின் நிர்வாகம், இவரது அடையாளத்தால் நோயாளிகள் அந்த மருத்துவமனைக்கு வர தயங்குவர் என்று கூறியுள்ளனர்.
அதன் பின்னர் இவர்கள் இருவரும் உஸ்மானியா பொது மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகளாக பணியில் சேர்ந்துள்ளனர். திருநங்கைகள் அரசுப் பணியைப் பெறுவது எங்களுக்கு மட்டும் அல்ல நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளின் வெற்றியைக் குறிக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த திருநங்கைகள் உரிமை ஆர்வலர்கள் தலைநகரில் உள்ள புகழ்பெற்ற அரசு மருத்துவமனையில் இரண்டு திருநங்கை மருத்துவர்களை மருத்துவ அதிகாரிகளாக நியமித்த மாநில அரசின் நடவடிக்கையை பாராட்டினர். அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவால் மிகவும் பெருமை அடைவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதயம் படிங்க : ராபிடோ புக் செய்த கேரள பெண்.. நண்பர் உதவியுடன் வன்கொடுமை செய்த ட்ரைவர்.. பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்!
திருநங்கைகளை மருத்துவ அதிகாரிகளாக நியமிப்பது, சமூகத்தில் உள்ள மற்ற இரு பாலினத்தைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு இணையாக திருநங்கை மருத்துவர்களும் சம தகுதி வாய்ந்த மருத்துவர்களாக உள்ளனர் என்பதை மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த நிபுணர்களுக்கு வலுவான செய்தியை அளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பல தசாப்தங்களாக திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்து வரும் பாகுபாடு மற்றும் சமூகப் புறக்கணிப்புக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகின்றனர்.
இருவரும் மருத்துவ அதிகாரிகளாக நியமிக்கப்பட்டாலும், அவர்கள் எழுதிய நீட் முதுகலை தேர்வுக்கு வரும்போது அவர்கள் மீதுள்ள பாரபட்சம் ஈனும் இருப்பதை காட்டுகிறது. மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் தேர்வெழுதினாலும், தங்களுக்கு இடஒதுக்கீடு இடங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், மாநில கவுன்சிலிங் பட்டியலில் அவர்களை 'பெண்' பட்டியலில் சேர்த்துள்ளனர். இது 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நன்கு அறியப்பட்ட NALSA தீர்ப்புக்கு எதிரானது என்றும் அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசிடம் இருவரும் மனு அளித்துள்ளனர். தாங்கள் சமர்ப்பித்த மனுக்கள் பலனளிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hyderabad, Transgender