முகப்பு /செய்தி /இந்தியா / மகளின் திருமண நேரத்தில் வீட்டில் தீ... நெருப்பில் கருகிய மனைவி, தாய்.. உண்மையை மறைத்து திருமணத்தை முடித்த தந்தை!

மகளின் திருமண நேரத்தில் வீட்டில் தீ... நெருப்பில் கருகிய மனைவி, தாய்.. உண்மையை மறைத்து திருமணத்தை முடித்த தந்தை!

திருமணத்தன்று தீ விபத்து.

திருமணத்தன்று தீ விபத்து.

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட அந்த தீ விபத்தில் சுபாத் லாலின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் உள்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Jharkhand, India

ஜார்க்கண்டில் தனது மகள் திருமணம் நடக்கவேண்டும் என்பதற்காக திருமணத்தன்று தனது மனைவி, தாய், தந்தை இறந்த செய்தியை மணமகளின் தந்தை மறைத்த சம்பவம் நடந்துள்ளது ஜார்க்கண்ட் மாநிலம் தன்பெட் மாவட்டம் ஜொரப்ஹடக் பகுதியை சேர்ந்தவர் சுபாத் லால். தனது மகள் ஸ்வாதி, மனை மற்றும் பெற்றோருடன் ஜொரப்ஹட்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வந்தார். இதனிடையே, ஸ்வாதிக்கு பெங்களூருவில் பணியாற்றி வரும் கவுரவ் என்ற இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணம் ஸ்வாதி குடியிருக்கும் பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலையில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது. மகளின் திருமணத்திற்காக  அனைவரும் தயாராகிக்கொண்டிருந்தனர். அலங்காரம் உள்பட பிற சடங்கு ஏற்பாடுகளுக்காக மண்டத்திற்கு விரைவாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் மண மகள் ஸ்வாதி தனது தோழிகளுடன் மாலை 4 மணிக்கே  மண்டபத்திற்கு சென்றுவிட்டார். ஸ்வாதி மண்டபத்திற்கு சென்ற நிலையில் சுபாத் லால்  குடும்ப உறுப்பினர்களுடன் திருமண மண்டபத்திற்கு செல்ல வீட்டில் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது, மாலை 6 மணியளவில்  அடுக்குமாடி குடியிருப்பில் 2ஆம் தளத்தில்  திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  மளமளவென பரவியா தீ 3-வது மற்றும் 4வது தளத்திற்கு பரவியது. இதில் சுபாத் லால் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிக்கிக்கொண்டனர்.

தீ வேகமாக பரவிய நிலையில் சுபாத் லால் சிறு காயங்களுடன் தீ விபத்தில் இருந்து தப்பித்தார். ஆனால், சுபாத் லாலின் மனைவி, தாய், தந்தை குடும்ப உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் தீயில் சிக்கி மூச்சுத்திணறி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட அந்த தீ விபத்தில் சுபாத் லாலின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் உள்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.

ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த மண்டபத்தில் இருந்த குடும்பத்தினருக்கு இது தெரியவந்தது. அனால் திருமணம் நல்ல படியாக நடக்கவேண்டும் என்பதற்காக யாரும் இதை மணமகளிடம் சொல்லவில்லை. தனது மனைவி, தாய், தந்தை தீயில் கருகி உயிரிழந்ததை நேரில் கண்டு மனமுடைந்த சுபாத் லால் தனது மகள் ஸ்வாதியின் திருமணத்தை பார்த்துவிட கனத்த இதயத்துடன் திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார். நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து சுபாத் லால் மீளாத நிலையில் திருமண சடங்குகளை ஸ்வாதியின் உறவினர்கள் நடத்தினர்.

இதையும் படிங்க: 3,600 பேரிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 90ஸ் கிட்… போலீஸிடம் சிக்கியது எப்படி?

தாய், தாத்தா, பாட்டி குறித்து ஸ்வாதி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த நிலையில் அவரை உறவினர்கள் சமாதானபடுத்தினர். பின்னர், சவுரவுக்கும் ஸ்வாதிக்கும் திருமணம் முடிந்தபின்னர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரது குடும்பம் உயிரிழந்தது குறித்து ஸ்வாதியிடம் கூறியுள்ளனர். இதைக்கேட்டு ஸ்வாதி பேரதிர்ச்சியடைந்து மணக்கோலத்தில் கதறி அழுதுள்ளார்.

திருமணத்தன்று நடந்த இந்த சம்பவம் அனைவரின் மனதையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Accident, Fire accident, Marriage