சதாப்தி எக்ஸ்பிரஸில் பயங்கர தீவிபத்து... மீட்பு பணிகள் தீவிரம்

சதாப்தி எக்ஸ்பிரஸ்

தீயணைப்பு படையினர் பல முயற்சிகளுக்குப் பிறகு ரயிலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

 • Share this:
  டெல்லியிலிருந்து டேராடூனுக்கு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் உத்தராகண்ட் மாநிலத்தின் கன்ஸ்ரே ரயில் நிலையம் அருகே தீடிரென தீப்பிடித்து உள்ளது. ரயிலின் C4 கம்பார்ட்மென்ட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்துள்ளது என்றும் பயணிகள் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உத்தராகண்ட் டிஜிபி தெரிவித்துள்ளார்.

  டெல்லியில் இருந்து டேராடூனுக்கும் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஹரித்வார் அருகே கன்ஸ்ரோ நிலையம் அருகே தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ ஒரு பயங்கரமாக பரவ ஆரம்பத்துள்ளது. ரயிலின் சி -4 கம்பார்ட்மென்ட் ஜன்னல்களிலிருந்து அதிக தீப்பிழம்புகள் எழத் தொடங்கின. ரெய்வாலா மற்றும் கன்ஸ்ரோ ரயில்வே தொகுதிகளில் மதியம் 12 மணிக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

  ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனேயே, ரயில்வே அதிகாரிகள் அவசரமாக எச்சரிக்கப்பட்டனர். தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் பல முயற்சிகளுக்குப் பிறகு ரயிலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.  தீ விபத்து ஏற்பட்ட பெட்டியில் மொத்தம் 35 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீவிபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  Published by:Vijay R
  First published: