ஹோம் /நியூஸ் /இந்தியா /

அணைக்காமல் வீசிய சிகரெட்.. அதிகாலையில் தீப்பற்றி எரிந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்!

அணைக்காமல் வீசிய சிகரெட்.. அதிகாலையில் தீப்பற்றி எரிந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்!

தீப்பற்றி எரிந்த ரயில்

தீப்பற்றி எரிந்த ரயில்

ரயில் பெட்டி தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்த பயணிகள் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருப்பதி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று அதிகாலை திருப்பதிக்கு வந்து சேர்ந்த திருமலா எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் இறங்கிய பின் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது யாரோ ஒருவர் பாதி எரிந்த நிலையில் இருந்த சிகரெட் துண்டை ரயிலின் எஸ்6 பெட்டி கழிவறையில் வீசி சென்றுள்ளார்.

இதையும் படிங்க: 

20 ரூபாயாக மாறிய ரூ.500.. அசந்த நேரத்தில் மோசடி செய்த ரயில்வே ஊழியர்.. வீடியோவால் வெளிவந்த உண்மை!

இதனால் அந்த பெட்டி தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்த பயணிகள் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் நிலைய ஊழியர்கள் ஆகியோர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப் பதிவு செய்து ரயில் பெட்டியில் பாதி எரிந்த சிகரெட்டை வீசி சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Tirupathi