விசாகப்பட்டினத்தில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ விபத்து

ஜாகுவார் கப்பலில் திடீர் தீ விபத்து

  • Share this:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் இருந்த ஜாகுவார் கப்பலில் திடீர் தீ விபத்தில்  28 பேர் மீட்கப்பட்டனர்.


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் நடுக்கடலில் இருந்த ஜாகுவார் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பின்னர், கப்பலின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ முழுவதுமாக பரவத் தொடங்கியது. இதனையடுத்து, அந்த கப்பலில் உள்ளவர்கள் கடலோர காவல்படையினரை அழைத்துள்ளனர்.

மற்றொரு கப்பலில் விரைந்து சென்ற கடலோர காவல்படையினர்,  ஜாகுவார் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர்.

ஜாகுவார் கப்பலில் இருந்த 29 பேரும் குதித்தனர். கடலோர காவல்படை வீரர்கள் அவர்களுக்கு அவசரகால உபகரணங்களை கடலில் வீசி 28 பேரை மீட்டனர்.

ஒருவர் மட்டும் மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணியும், கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கவும் கடலோர காவல்படை போராடி வருகிறது.

Also watch: ரஜினிக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...

Published by:Anand Kumar
First published: