கேரளாவில் வீடு தீப் பிடித்து எரிந்த நிலையில் தீயில் சிக்கி தம்பதி பலியான நிலையில் அவர்களது மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் லைஃப் மிஷன் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் வசிக்கத் தொடங்கிய நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் புற்றடி பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரவீந்திரன் வயது 50 மற்றும் அவரது மனைவி உஷா (45) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இவர்களது மகள் ஸ்ரீதன்யா பலத்த தீக்காயங்களுடன் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது, தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தீக்காயங்களுடன் வீட்டின் வெளியே ஓடிய மகள் ஸ்ரீதன்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியினர் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்த பிறகு தீ அணைக்கப்பட்டது. ரவீந்திரன் மற்றும் உஷா ஆகியோரை உயிருடன் காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர், ஆனால் மீட்கும் போது இருவரும் இறந்தனர்.
Read More : பிளாட்பாரத்தில் ஏறிய மின்சார ரயில்.. அச்சத்துடன் ஓடிய பயணிகள்.. வெளியான சிசிடிவி காட்சிகள்
இந்த தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் லைஃப் மிஷன் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் கிரக பிரவேச நிகழ்ச்சி முடித்து வசிக்கத் தொடங்கினர். இந்த திட்டத்தில் பெறப்பட்ட வீட்டின் கட்டுமான பணிகளை வறுமை காரணமாக நீண்ட கால முயற்சிக்கு பின்னரே ரவீந்திரனால் முடிக்க முடிந்தது. ஆனால் கிரக பிரவேசம் முடித்து மூன்றாவது நாளே வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு தம்பதியர் இறந்த செய்தி அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.