Home /News /national /

ஓ.என்.ஜி.சி. கிடங்கில் பயங்கர தீ விபத்து... 4 பேர் உயிரிழப்பு - பலர் படுகாயம்

ஓ.என்.ஜி.சி. கிடங்கில் பயங்கர தீ விபத்து... 4 பேர் உயிரிழப்பு - பலர் படுகாயம்

ஓ.என்.ஜி.சி

ஓ.என்.ஜி.சி

மும்பையில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கிடங்கு நவி மும்பையின் உரான் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. வெள்ளநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த தீயானது, மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.



தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த கிடங்கில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு பணியில் எந்த பிரச்னையும் இல்லை என ஓ.என்.ஜி.சி.நிர்வாகம் கூறியுள்ளது.



Also watch

Published by:Prabhu Venkat
First published:

Tags: Mumbai, ONGC

அடுத்த செய்தி