புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் சிரம் நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
மராட்டிய மாநிலம் புனேவிலுள்ள, சீரம் நிறுவனத்தின் முதல் முணையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. கொரோனா தடுப்பு மருந்தான கோவீஷீல்டை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வெடிசப்தத்துக்குப் பிறகு தீப்பறியதாகவும் அந்த இடத்தில் மருந்து தயாரிக்கும் பணி ஏதும் நடக்கவில்லை என்று சீரம் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. திடீர் தீவிபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்தும், தீவிபத்தில் ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பு குறித்தும் சீரம் நிறுவன அதிகாரிகள் மற்றும் புனே காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்