• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • #Kaun Banega Crorepati | மனுஸ்மிரிதி குறித்த கேள்விக்காக அமிதாப் பச்சன் மீதும், கோடீஸ்வரன் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீதும் வழக்கு,,

#Kaun Banega Crorepati | மனுஸ்மிரிதி குறித்த கேள்விக்காக அமிதாப் பச்சன் மீதும், கோடீஸ்வரன் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீதும் வழக்கு,,

கோடீஸ்வரன் போட்டி நிகழ்வில் அமிதாப் பச்சன்

கோடீஸ்வரன் போட்டி நிகழ்வில் அமிதாப் பச்சன்

எந்த புத்தகம் எரிக்கப்பட்டது என்னும் கேள்வி, மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக, தற்போது போட்டி நிகழ்ச்சியின் நெறியாளரான அமிதாப் பச்சன் மீதும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீதும் லக்னோவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

  • Share this:
    மிகப் பிரபலமான போட்டி நிகழ்ச்சியான கெளன் பனேகா கரோர்பதி என்னும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். இந்நிகழ்ச்சியின் 12-வது சீசனான கேபிசி 12,  கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி துவங்கப்பட்டது. இன்ஃபோடெய்ன்மெண்ட் எனப்படும் தகவல்களை தெரிந்துகொள்ளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான இதில் மனுஸ்மிருதி குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தியதாக அமிதாப் பச்சன் மீதும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    மகசேசே விருது பெற்றவரும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான அந்தோலன் கரம்சாரி அமைப்பு நிறுவனருமான பெஸ்வாடா வில்சனும், நடிகர் அனூப் சோனியும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், 1927-ஆம் ஆண்டு, டிசம்பர் 25-ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் எரித்த புத்தகம் எது என்னும் கேள்வி கேட்கப்பட்டு,  விஷ்ணு புராணம், பகவத் கீதை, ரிக் வேதம், மனு ஸ்மிருதி என்னும் நான்கு ஆப்ஷன் பதில்களும் தரப்பட்டன.

    மேலும் படிக்க: பாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

    எந்த புத்தகம் எரிக்கப்பட்டது என்னும் கேள்வி, மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக, தற்போது போட்டி நிகழ்ச்சியின் நெறியாளரான அமிதாப் பச்சன் மீதும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீதும் லக்னோவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்த கேள்வியை இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் ட்விட்டர் வாசிகள், இடதுசாரி கொள்கைகளை பரப்பும் நிகழ்ச்சி என விமர்சித்து கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

    மேலும் படிக்க: ’உத்தர பிரதேசத்தில் லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும்’ - யோகி ஆதித்யநாத்

    மனுஸ்மிரிதியில் பெண்களைக் குறித்து இழிவான கருத்துக்கள் இருப்பதாக, மேற்கோள் காட்டிப் பேசிய விசிக கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் மீது பெண்களை இழிவுபடுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: