பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை

பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை
மாதிரிப் படம்
  • Share this:
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாப் பகுதியைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.கவில் இருந்த எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தநிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் பாதோஹி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ரவிந்திரநாத் திரிபாதி மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஆறு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று காவல்துறையினர் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த பாதோஹி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராம் பதான் சிங், ‘2017-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி எம்.எல்.ஏ பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் புகார் அளித்துள்ளார். எம்.எல்.ஏவின் உறவினர்களும் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.


இதுதொடர்பாக பெண் குறிப்பிட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். இதுகுறித்து விளக்கமளித்த எம்.எல்.ஏ ரவிந்திரநாத் திரிபாதி, ‘என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. போலியானவை. தேர்தல் நேரத்தின்போது இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றால் அப்போதே ஏன் இந்த விவகாரம் எழுப்பப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading