போலீசாரை தாக்கியதாக என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு...!

போலீசாரை தாக்கியதாக என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு...!
கொல்லப்பட்ட 4 பேர்
  • News18
  • Last Updated: December 7, 2019, 1:26 PM IST
  • Share this:
தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர், நேற்று என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், போலீசாரை தாக்கியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியான ஷாத்நகர் அருகே உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண் தனியாக டோல்கேட்டை கடப்பதை கண்ட சிலர் வேண்டுமென்றே பெண்ணின் வாகனத்தை பஞ்சர் செய்துள்ளனர். இதனை அடுத்து, அந்தப் பெண் உதவியின்றி தவித்து நிற்கும் போது, உதவுவது போல சென்று, அவரை அங்கிருந்து கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை அடுத்து, பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றுள்ளனர்.


இந்த வழக்கு தொடர்பாக முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்து சென்ற போலீசார் எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டச் செய்தனர்.

அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதனை அடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். போலீஸார் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, கற்கலால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதாகவும், அவர்களை தப்பிக்க விடக்கூடாது என்பதற்காக என்கவுன்டர் செய்ததாகவும் போலீஸ் கமிஷ்னர் கூறினார்.இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், கேள்விகளையும் பலர் முன்வைத்துள்ளனர். இதற்கிடையே, என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை நடத்த உள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நான்கு பேரையும் புதைக்க நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

இந்த நிலையில், போலீசாரை தாக்கியதாக கொல்லப்பட்ட 4 பேர் மீதும் அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணியில் இருக்கும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் கொலை செய்யும் நோக்கத்தில் தாக்குதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
First published: December 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading