• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 4 கிலோ அசைவ சாப்பாடு ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டால் ராயல் என்பீல்டு பைக் பரிசு... எங்கு தெரியுமா?

4 கிலோ அசைவ சாப்பாடு ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டால் ராயல் என்பீல்டு பைக் பரிசு... எங்கு தெரியுமா?

4 கிலோ அசைவ சாப்பாடு ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டால் ஒரு ராயல் என்பீல்டு பைக் பரிசு

4 கிலோ அசைவ சாப்பாடு ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டால் ஒரு ராயல் என்பீல்டு பைக் பரிசு

கொரோனா காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் , 4 கிலோ நான் வெஜ் உணவை சாப்பிட்டால் ஒரு ராயல் என்பீல்டு பைக் இலவசம் என்று ஓட்டல் உரிமையாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.

  • Share this:
    மராட்டிய மாநிலம் புனேவில் அதுல் வாய்கர் என்பவர் ஒட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின், ஓட்டலில் பிரமாண்ட தட்டுகளில் வழங்கப்படும் நான் வெஜ் ரகங்கள் வெகு பிரபலம். ஸ்பெஷல் ராவண் சாப்பாடு, புல்லட் சாப்பாடு, மால்வானி மீன் சாப்பாடு உள்ளிட்ட 6 வகை உணவு வகைகள் இந்த ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு ரக உணவும் ரூ.2,500 மதிப்புடையது. இந்த நிலையில், கொரோனா காரணமாக இவரின் ஓட்டலில் உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 4 கிலோ எடை கொண்ட புல்லட் தாலி எனும் உணவு பிளேட்டை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடித்தால் ராயல் புல்லட் பைக் பரிசாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

    புல்லட் தாலி என்பது ஒரு காய்கறி எதுவும் இல்லாதா  4 கிலோ மட்டன் மற்றும் வறுத்த மீன்களுடன் தயாரிக்கப்பட்ட உணாவு ஆகும். இது சுமார் 12 வகையான உணவுகளைக் கொண்டுள்ளது.

    பல இளைஞர்கள் கலந்து கொண்டு அதுல் வாய்கர் அறிவித்த போட்டியில் வெற்றி பெற முயன்றனர். ஆனால், ஒரே ஒருவர்தான் இதுவரை வெற்றி பெற்றுள்ளார். சோலாப்பூரைச் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் சோம்நாத் பவார் என்பதாகும்.

    மேலும் படிக்க..கடலூரில் போதை வெறியில் தந்தையை கொன்ற மகன்



     




    View this post on Instagram





     

    A post shared by Hotel SHIVRAJ (@hotelshivraj)






    எனினும், விடா முயற்சியாக ஒரு தட்டை ஒரு மணி நேரத்தில் சாப்பிட பல இளைஞர்கள் முயற்சித்து வருகின்றனர். வெற்றி பெறுவர்களுக்கு வழங்குவதற்காக அதுல் வாய்கர் ரெஸ்டாரன்ட்டில் எப்போதும் 5 ராயல் என்பீல்ட் பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு இந்த குறைந்தது 65 பேர் பிரமாண்ட உணவு தட்டை காலி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஓட்டல் உரிமையாளர் அதுல் வாய்கர் கூறியுள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: