Home /News /national /

வெளிநாட்டில் வேலை செய்ய கைரேகை அறுவை சிகிச்சை.. ஹைதராபாத்தில் மோசடி அம்பலம்

வெளிநாட்டில் வேலை செய்ய கைரேகை அறுவை சிகிச்சை.. ஹைதராபாத்தில் மோசடி அம்பலம்

ஆந்திராவில் கைரேகை அறுவை சிகிச்சை மோசடி

ஆந்திராவில் கைரேகை அறுவை சிகிச்சை மோசடி

Finger Print Scam : கைரேகை அறுவை சிகிச்சை செய்து, அதன் மூலம் வெளிநாட்டில் மோசடியாக வேலை செய்ய திட்டமிட்டிருந்த கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Hyderabad, India
    தனிநபரின் அடையாளம் மற்றும் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படியிருக்க தனது அடையாளத்தை மாற்ற கைரேகை அறுவை சிகிச்சை செய்து, அதன் மூலம் வெளிநாட்டில் மோசடியாக வேலை செய்ய திட்டமிட்டிருந்த இருவரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளது.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 39 வயதான சிவசங்கர் ரெட்டி, 25 வயதான ராமகிருஷ்ணா ரெட்டி. இருவரும் வளைகுடா நாடான குவைத்தில் கட்டடத் தொழிலாளர்களாக பணியாற்றியுள்ளனர். அங்கு அவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டதால் தண்டிக்கப்பட்டு, மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், தங்களின் அடையாளத்தை மாற்றி மீண்டும் மோசடியாக குவைத் செல்ல இருவரும் திட்டமிட்ட நிலையில், கைரேகை அறுவை சிகிச்சை செய்ய அவர்கள் முடிவெடுத்தனர்.

    இவர்களை வெளிநாட்டிற்கு அனுப்ப கைரேகை மாற்று அறுவை சிகிச்சை செய்து வைப்பதாக அதே பகுதியைச் சேர்ந்த ரேடியோலாஜிஸ்ட் மட்டும் எக்ஸ்ரே டெக்னிஷியனான நாக முனேஸ்வர ரெட்டி (வயது 36) மற்றும் அவரது உதவியாளர் சகபாலா வெங்கட் ரமணா (39 வயது) உறுதியளித்துள்ளனர்.இதற்கு ரூ.25,000 கட்டணம் என உறுதி அளித்துள்ளனர்.

    இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னதாக தங்கியுள்ளனர்.இந்த மோசடி தொடர்பான தகவல் தெலங்கானா சிறப்பு பிரிவு காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து ரெய்டு மேற்கொண்டனர். அப்போது தொழிலாளர்கள் சிவசங்கர் ரெட்டி, ராமகிருஷ்ணா ரெட்டி ஆகிய இருவரையும் காவல்துறை கையும் களவுமாக பிடித்ததது. மேலும், இந்த மோசடி அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருந்த நாக முனேஸ்வர ரெட்டி (வயது 36) மற்றும் அவரது உதவியாளர் சகபாலா வெங்கட் ரமணா (39 வயது) ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

    இதையும் படிங்க: 6 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன மாற்றுத் திறனாளியை குடும்பத்துடன் சேர்த்து வைத்த ஆதார்!

    இவர்கள் இதுவரை கேரளா, ராஜஸ்தான் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 11 பேருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ள காவல்துறை இந்த கும்பலின் பின்னணியில் மேலும் பலர் உள்ளனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Andhra Pradesh, Fraud, Kuwait, Telangana

    அடுத்த செய்தி