நிதிச் சுதந்திரத்தின் மூலமே பெண்களை மேம்படுத்த முடியும் – பிரதமர் மோடி

news18
Updated: July 12, 2018, 9:49 PM IST
நிதிச் சுதந்திரத்தின் மூலமே பெண்களை மேம்படுத்த முடியும் – பிரதமர் மோடி
பிரதமர் மோடி
news18
Updated: July 12, 2018, 9:49 PM IST
சமூக கொடுமைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நிதி அடிப்படையில் பெண்கள் மேம்பாடு அடைய வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து கலந்துரையாடி வருகிறார். இதன்படி, நாடு முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பிரதிநிதிகளுடன் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், “எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அவற்றில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். வேளாண்மைத் துறை, பால்வளத் துறை ஆகியவை பெண்கள் இல்லாமல் செயல்படாது. நாட்டில் உள்ள பெண்களிடம் அதிக அளவில் திறமை இருக்கிறது. அந்த திறமையை பயன்படுத்தச் செய்ய வேண்டியது அவசியம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் “நிதிச் சுதந்திரம் அளிப்பதன் மூலமாகவே பெண்களை மேம்படுத்த முடியும். நிதி அடிப்படையில் மேம்பாடு அடைந்த பெண்கள், சமூகக் கொடுமைகளுக்கு எதிரான அரணாக திகழ்வார்கள். சுயஉதவிக் குழுப் பெண்கள், பொருளாதார மற்றும் சமூக அடிப்படையில் வலுவான நிலையை அடைந்து வருகிறார்கள். கிராமப்புறங்களில் சிறு தொழில்முனைவோர், பணியாளர்கள் உள்ளிட்டோரின் வளர்ச்சிக்கு சுயஉதவிக் குழுக்கள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்” என்று மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், பீகார், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுயஉதவிக் குழுவினர் கலந்துகொண்டனர். தங்களது அனுபவங்களையும், சுயஉதவிக் குழு மூலம் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும் அந்தப் பெண்கள் பகிர்ந்துகொண்டனர்.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...