முகப்பு /செய்தி /இந்தியா / டாலர் பிரச்சனையை உலகிலேயே இந்தியா தான் சிறப்பாக கையாள்கிறது..ரூபாய் வீழ்ச்சி குறித்து நிதியமைச்சர் பதில்

டாலர் பிரச்சனையை உலகிலேயே இந்தியா தான் சிறப்பாக கையாள்கிறது..ரூபாய் வீழ்ச்சி குறித்து நிதியமைச்சர் பதில்

ரூபாய் வீழ்ச்சி குறித்து நிர்மலா சீத்தாராமன் விளக்கம்

ரூபாய் வீழ்ச்சி குறித்து நிர்மலா சீத்தாராமன் விளக்கம்

பொருளாதார சூழலை ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் கூர்ந்து கவனித்து வருகிறது என இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பான கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

கோவிட் பெருந்தொற்று முடக்கம் காரணமாக உலக பொருளாதாரம் இரண்டு ஆண்டுகளாக முடக்கம் கண்டன. இதன் தாக்கம் இந்தியாவிலும் வெகுவாக எதிரொலித்த நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் மெல்ல பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பின. இந்த சூழலில் தற்போது இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படும் விதமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சியை கண்டுவருகிறது.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் சரிந்து வரலாறு காணாத வகையில் 81.09 ஆக வர்த்தகமாகி வருகிறது.இதற்கும் சர்வதேச சூழல் தான் காரணமாக பார்க்கப்படுகிறது.உக்ரைன் போர் எதிரொலி போன்ற காரணங்களால் பல்வேறு நாடுகளும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு அமெரிக்க ஃபெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. அத்துடன், தங்கத்தின் மீதான முதலீடு செய்வோரின் கவனம், கணிசமாக திரும்பியுள்ளது. இந்த பின்னணியில் தான் இந்தியாவில் ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ரூபாய் மதிப்பு சரிவு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு  பதில் தந்துள்ளார். நிர்மலா சீதாராமன் தனது பதிலில், தற்போதைய சர்வதேச பொருளாதார சூழலில் இந்த நெருக்கடியான நிலையில், உலக அளவில் தாக்குப்பிடித்து நிற்கும் ஒரே நாணயம் இந்திய ரூபாய் மட்டுமே. நாம் இந்த சூழலை சிறப்பாக கையாண்டு வருகிறோம். மற்ற நாடுகளின் நாணயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நீங்கள் படித்து பார்க்க வேண்டும்.அனைத்து நாட்டின் நாணயங்களும் சரிவில் தான் உள்ளன என்றார்.

இதையும் படிங்க: மன்மோகன் சிங் சிறந்த நபர் தான், ஆனால்.. விவாதமாகும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்து

மேலும், அவர் இந்த சூழலை ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் கூர்ந்து கவனித்து வருகிறது. வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றுள்ளார்.இந்த வீழ்ச்சியை சமாளிக்க இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முக்கிய கொள்கை முடிவுகளை தயாரித்து வருவதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

First published:

Tags: Indian economy, Indian Rupee, Nirmala Sitharaman, US dollar