ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்திய ரூபாய் மதிப்பு குறையவில்லை... அமெரிக்க டாலர்தான் உயர்கிறது - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இந்திய ரூபாய் மதிப்பு குறையவில்லை... அமெரிக்க டாலர்தான் உயர்கிறது - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் அமெரிக்காவின் டாலர் மதிப்பு தான் உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaAmericaAmericaAmericaAmerica

  இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை, அமெரிக்க டாலரின் மதிப்புதான் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

  அமெரிக்காவில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக நிர்மலா சீதாராமன் அமெரிக்க சென்றுள்ளார்.

  அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம்,  இந்திய ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத சரிவைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

  கடந்த சில நாட்களாகச் சர்வதேசச் சந்தையில் இந்திய ரூபாயில் மதிப்பு சரிந்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 82.42 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர், கஞ்சா எண்ணெய் விலை உயர்வு, வங்கி வட்டி விகிதம் உயர்வு போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

  Also Read : 6 மாதங்களுக்கு மேலாக நதியால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள் : மகாராஷ்டிரா மாநிலத்தை கண்டித்த உயர்நீதிமன்றம்!

  இந்த நிலையில்,  இந்திய ரூபாயில் மதிப்பு சரியவில்லை, அமெரிக்காவின் டாலரின் மதிப்புதான் உயர்கிறது என்று தான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். இதர நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாய் சர்வதேச சந்தையில் வலுவாகத் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  வளர்ந்து வரும் நாடுகளுடன் அமெரிக்க டாலரில் உயரும் மதிப்பை ஒப்பிடும் போது இந்தியா நல்ல நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Indian Rupee, Nirmala sitaraman