Home /News /national /

நிதி மசோதா நிறைவேற்றம்: கிரிப்டோகரன்சிக்கு வரி விதிக்கும் நடைமுறை ஏப்.1 முதல் அமல்!

நிதி மசோதா நிறைவேற்றம்: கிரிப்டோகரன்சிக்கு வரி விதிக்கும் நடைமுறை ஏப்.1 முதல் அமல்!

கடந்த 2014ல் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 5 கோடியாக இருந்த நிலையில், தற்போது 9 புள்ளி 1 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

    மக்களவையில் நிதி மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து, கிரிப்டோகரன்சிக்கு வரி விதிக்கும் நடைமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

    மக்களவையில் நிதி மசோதா மீதான விவாத்தின் போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளில் இருந்து பொருளாதாரத்தை மீட்க மற்ற நாடுகளைப் போல மத்திய அரசு வரியை உயர்த்தவில்லை என்றார்.

    பெரு நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டதற்கான பலன் கிடைத்துள்ளதாகக் கூறிய அவர், கடந்த 2014ல் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 5 கோடியாக இருந்த நிலையில், தற்போது 9 புள்ளி 1 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

    28, 29 தேதிகளில் நாடு தழுவிய ஸ்டிரைக் அறிவிப்பு.. ஏன் நடக்கிறது? என்ன பணிகள் பாதிக்கும்?

    உக்ரைன் - ரஷ்யா போர் சூழலால் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாக விளக்கமளித்த நிர்மலா சீதாராமன், கடந்த 1951-ம் ஆண்டில் விலைவாசி உயர்வுக்கு கொரியாவில் நடந்த போரை நாட்டின் முதல் பிரதமரான நேரு காரணம் கூறியதையும் சுட்டிக்காட்டினார்.

    கிரிப்டோகரன்சிக்கு எந்த அளவுக்கு வரி விதிக்கலாம் அல்லது முழுவதுமாக தடை செய்யலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவித்த அவர், இறுதி முடிவெடுக்கும் வரை கிரிப்டோகரன்சிகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி வரி வசூலிக்கப்படும் என்றும் கூறினார்.

    அதைத்தொடர்ந்து, நிதி மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது. இதன்மூலம் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையில் பெறப்படும் வருமானத்திற்கு 30 சதவீதம் வரிப் பிடித்தம் செய்யும் நடைமுறை வரும் ஒன்றாம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Crypto currency, Cryptocurrency, Nirmala Seetharaman, Parliament

    அடுத்த செய்தி