Home /News /national /

புதுச்சேரியில் திரைப்பட நகரம் உருவாக்கப்படும்..! - துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

புதுச்சேரியில் திரைப்பட நகரம் உருவாக்கப்படும்..! - துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

pudhucherry : புதுச்சேரி சகல வசதிகளுடன் திரைப்பட நகரம்  உருவாக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியின் சுற்றுலா தலங்களில் ஒன்றான 200 ஆண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 60 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த பூங்காவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஆய்வு செய்தார். மேலும்  அங்கு அமைய உள்ள பல்வேறு வகையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

 தாவரவியல் பூங்காவில் இயக்கப்படும் சிறுவர் ரயிலில் சுற்றுலா பயணிகளுடன் அவர் பயணித்து பூங்காவை ஆய்வு செய்தார்.அப்போது உடன் பயணித்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ஆளுநருடன் செல்பி எடுத்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தாவரவியல் பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 60 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட  உள்ளது. இதில் மூத்த குடிமக்கள் தங்குவதற்கான இடம், தாய்மார்களுக்கான தனி இடம், பள்ளி மாணவர்களுக்கான இடம், நடைபயிற்சி  மேற்கொள்ளும் இடம் போன்றவைகள் மேம்படுத்தப்பட உள்ளது.

Also Read: வனத்துறை வாகனம் முன்பு கம்பீரமாக நடந்து வந்த புலி.. பீதியில் உறைந்த சுற்றுலா பயணிகள் - வைரலாகும் வீடியோ

மேலும் சிறுவர்கள் ரயில், சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிவறை வசதிகள், உடற்பயிற்சி கூடம் மற்றும்  பூங்காவை சுற்றிப் பார்க்க பேட்டரி கார் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.பூங்காவில் உள்ள பாரதமாதா சிலை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றும் மீன் காட்சியகம் புனரமைக்கப்பட்டு பூங்காக்களின் சொர்க்கமாக மாற்றப்படும் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் புதுச்சேரியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் வகையில் சினிமா பிரபலங்களின் கோரிக்கைகளை ஏற்று சவுண்ட் தியேட்டர், ரெக்கார்டிங் உள்ளிட்ட வசதிகளுடன் ஒரு முழுமையான திரைப்பட நகரம் புதுச்சேரியில் உருவாக்கப்படும் என்று தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், நிறுத்தப்பட்ட மலர் கண்காட்சி மீண்டும் நடத்தப்படும் மேலும் மாடித்தோட்டம் வீட்டுத் தோட்டம் மற்றும் தோட்டக்கலையை ஊக்குவிக்கும் வகையில் தோட்ட திருவிழா நடத்தப்படும் என்றார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Cinema, Film, Pudhucherry, Tamil News, Tamilisai Soundararajan

அடுத்த செய்தி