கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள எரப்பு அருவியில் ப்ளாஸ்டிக் குப்பைகள் நிறைந்துவிட்டதால் அவற்றை அகற்ற அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே ஒன்றிணைந்துள்ளனர்.
சமீபத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் எரப்பு அருவியின் இயற்கை அழகை ப்ளாஸ்டிக் குப்பையிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என மக்களின் ஒரு பொதுக்குழுவினர் முயற்சியைக் கையில் எடுத்தனர். தினமும் சாக்கு மூட்டைகளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிஜீவன சமிதி என்னும் குழுவைச் சேர்ந்த மக்கள் குப்பையை அகற்றுகின்றனர்.
ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மட்டும் 15 மூட்டைகள் அகற்றப்பட்டுள்ளன. எரப்பு அருவியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக் காணப்பட்டாலும் அதையும் மீறி ப்ளாஸ்டிக் குப்பைகள் மிகப் பெரிய சீர்கேடை ஏற்படுத்தி உள்ளன. தொடர்ந்து பொதுக்குழுவினர் பங்களிப்பைக் கண்டு அப்ப்குதியைச் சேர்ந்த சுய உதவிக்குழுவினர், இளைஞர்கள் நற்பணி மன்றம், பெண்கள் மன்றம் ஆகியவையும் இணைந்து இந்த தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பார்க்க: பாரம்பரிய முறைகளால் தண்ணீர் பஞ்சத்தைத் துரத்திய வடகிழக்கிந்திய மக்கள்..! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.