ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருமண விருந்தில் ரசகுல்லா தராததால் ஆத்திரம்.. களேபரத்தில் முடிந்த கல்யாணம் - இளைஞர் உயிரிழந்த பரிதாபம்

திருமண விருந்தில் ரசகுல்லா தராததால் ஆத்திரம்.. களேபரத்தில் முடிந்த கல்யாணம் - இளைஞர் உயிரிழந்த பரிதாபம்

ரசகுல்லா

ரசகுல்லா

பந்தியில் ரசகுல்லா பரிமாறப்படவில்லை என்ற காரணத்திற்காக சின்னஞ்சிறு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அது பெரும் மோதலாக மாறியிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Agra, India

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் திருமண விழா ஒன்றில் ரசகுல்லா பரிமாறப்படவில்லை என கூறி மோதல் எழுந்தது. இந்த மோதலின் இறுதியில் 22 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர். ஆக்ரா அருகே உள்ள எட்மத்பூரில் இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நிகழ்ந்தது.

இப்பகுதியை சேர்ந்த இஸ்மான் அஹமது என்பவரின் இரண்டு மகள்களுக்கும், வகார் அஹமது என்பவரின் இரண்டு மகன்களுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது, பந்தியில் விருந்தினர்கள் சிலருக்கு ரசகுல்லா பரிமாறப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அவர்கள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், இருவீட்டார் தரப்பிலும் உள்ள இளைஞர்கள் வன்முறையில் இறங்கி விட்டனர்.

விழா அரங்கில் இருந்த நாற்காலிகளை தூக்கி ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து கொண்டனர். அதேபோல உணவுத் தட்டுகளை வைத்தும் தாக்கிக் கொண்டனர். சிலர் கரண்டிகள் மற்றும் கத்தியை எடுத்து தாக்க தொடங்கினர்.இந்த மோதலின்போது 22 வயது இளைஞர் உயிரிழந்தார். இதற்கிடையே, தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருதரப்பு விருந்தினர்களை அவர்கள் சமாதானப்படுத்தினர். தடயவியல் துறை அதிகாரிகள் வந்து தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்துக் கொண்டனர்.

Also Read:  ஆசை காதலனுக்கு ஆசிட் கலந்த ஜூஸ் கொடுத்த காதலி - இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்

இதுகுறித்து எட்மத்பூர் வட்ட காவல் அதிகாரி ரவிக்குமார் கூறுகையில், “பந்தியில் ரசகுல்லா பரிமாறப்படவில்லை என்ற காரணத்திற்காக சின்னஞ்சிறு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அது பெரும் மோதலாக மாறியிருக்கிறது. விருந்தினர்கள் மீது ஒருநபர் கத்தியை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சன்னி என்ற நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக, கொலையான சன்னி குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மோதல் புதிதல்ல :  

திருமண விழாக்களில் அற்ப விஷயங்களுக்காக பெரும் சண்டை நடப்பது இது முதல்முறையல்ல. குறிப்பாக, விருந்து உபசரிப்பு தொடர்பாகவே இத்தகைய மோதல்கள் நடைபெறுகின்றன. சின்னஞ்சிறு குறைகளை சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத நிலையில் இத்தகைய மோதல்கள் அரங்கேறுகின்றன.

அண்மையில், கேரள மாநிலம், ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு முட்டம் அருகே திருமணம் நடைபெற்றது. இதில், விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் கூடுதலாக அப்பளம் கேட்டதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அது பெரும் மோதலாக முற்றியது. அங்கும் இரு தரப்பு விருந்தினர்கள் வாலி, கரண்டி உள்ளிட்டவற்றை தூக்கி வீசி மோதலில் ஈடுபட்டனர். மோதல் காட்சிகளை சிலர் செல்போனில் படம்பிடித்து வெளியிட்ட நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Fight, Marriage Problems, Wedding Season