திருமண விருந்தில் ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி பறிமாறியதால் அடிதடி!

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து உணவு பரிமாறப்பட்டது. அப்போது மணமகன் தரப்பு உறவினர்கள் சிலர் மது அருந்தி இருந்த நிலையில் திருமண விருந்தில் ஆட்டுக்கறி ஏன் பரிமாறவில்லை என மணமகள் வீட்டாரிடம் கேட்டு வாக்கு வாதம் செய்தனர்.

திருமண விருந்தில் ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி பறிமாறியதால் அடிதடி!
கறி விருந்தில் அடிதடி
  • News18
  • Last Updated: February 26, 2019, 5:12 PM IST
  • Share this:
தெலுங்கானாவில் திருமண விருந்தில் ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி பறிமாறியதால் மணமகன் உறவினருக்களுக்கும் மணமகள் உறவினருக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் பூர்கம்பாடு மண்டலம் உப்புசாகு கிராமத்தில் பிரவீன், அஜ்மீரா ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருதரப்பு உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர்.

இதையடுத்து திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து உணவு பரிமாறப்பட்டது. அப்போது மணமகன் தரப்பு உறவினர்கள் சிலர் மது அருந்தி இருந்த நிலையில் திருமண விருந்தில் ஆட்டுக்கறி ஏன் பரிமாறவில்லை என மணமகள் வீட்டாரிடம் கேட்டு வாக்கு வாதம் செய்தனர்.  அதற்கு போதிய பணம் இல்லாததால் ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி விருந்து போட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.


இதனால் கோபம் அடைந்த மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாருடன் தீவிர வாக்கு வாக்குவாதம் செய்தனர்.தொடர்ந்து வாக்குவாதம் மோதலாக மாறி கைகலப்பு ஏற்பட்டது.

உணவு பரிமாறுவதற்காக போடப்பட்டிருந்த பந்தலில் கட்டைகளை பிடுங்கியும், நாற்காலிகளை தரையில் வீசியும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பு உறவினர்களும் காயமடைந்த நிலையில் புர்கம்பாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காயமடைந்தவர்களை புர்கம்பாடு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ப்படுகிறது.  திருமணம் வரை அனைவரும் சந்தோஷமாக மணமக்களை வாழ்த்திய நிலையில் ஒரு சிலர் செய்த தவறால் மகிழ்ச்சியாக நடந்த திருமண விழா கலவரமாக மாறியது.Also Watch: அதிமுக ஊழல் கட்சியா? பதிலளிக்க மறுத்த அன்புமணி | Full Speech

First published: February 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading