5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித்ஷா வெற்றி! காந்தி நகர் தொகுதி வரலாறு ஒரு பார்வை

சி.ஜே.சாவ்டா. தாகுர் சாதியைச் சேர்ந்தவர். தற்போது, வடக்கு காந்தி நகரின் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். காந்திநகரில் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.

news18
Updated: May 24, 2019, 7:48 AM IST
5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித்ஷா வெற்றி! காந்தி நகர் தொகுதி வரலாறு ஒரு பார்வை
அமித் ஷா
news18
Updated: May 24, 2019, 7:48 AM IST
குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சி.ஜே.சாவ்டாவை 5 லட்சத்து 50 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

பா.ஜ.கவின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி ஆறு முறை எம்.பியாக வெற்றி பெற்ற குஜராத் மாநிலத்துள்ள காந்தி நகரில் இந்தமுறை அமித்ஷா போட்டியிட்டார். அதனால், காந்தி நகர் தொகுதியும் தேசிய அளவில் கவனம் ஈர்த்தது.

குஜராத் மாநிலம் காந்தி நகர் பா.ஜ.கவின் கோட்டை. 1989-ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற அத்தனை மக்களவைத் தேர்தல்களிலும் பா.ஜ.கதான் வெற்றி பெற்றுள்ளது. அத்வானி மட்டும் இந்த தொகுதியில் ஆறுமுறை போட்டியிட்டு அனைத்து முறையும் வெற்றி பெற்றுள்ளார். ஒருமுறை முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்தமுறை அத்வானியை ஓரம் கட்டிவிட்டு, அமித்ஷா அந்த தொகுதியில் போட்டியிட்டார்.

குஜராத்திலுள்ள மொத்த 26 மக்களவைத் தொகுதிகளில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி காந்தி நகர். மொத்தம் 19.20 லட்சம் வாக்காளர்களைக் கொண்டது. இந்த தொகுதியின் கீழ் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றனர். 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த ஏழு தொகுதிகளில் 5 சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.கவும், 2 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸும் வெற்றிபெற்றன.

இந்த காந்தி நகரில் தாகுர் மற்றும் பட்டிதார் பிரிவைச் சேர்ந்த மக்கள் அதிகமாக உள்ளன. இதில் தாகுர் மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக நீண்ட காலமாக காங்கிரஸ் இருந்துவருகிறது.

2009-ம் ஆண்டு அத்வானி இந்த தொகுதியில் போட்டியிடும்போது, அவருக்காக தொகுதி பொறுப்பாளராக இருந்தவர் அமித்ஷா. அத்வானியின் வெற்றிக்காக தீவிரமாக உழைத்தார். தற்போது, அவருடைய வெற்றிக்கா உழைத்திருக்கிறார்.

காந்தி நகரின் வேட்பாளராக அமித்ஷா அறிவிக்கப்பட்ட பிறகு, அவருக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. ஏற்கெனவே, இந்த தொகுதியில் அத்வானி போட்டியிட்ட காலங்களில் அவருக்கு எதிராக தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.ஷேசன், மாநில காவல்துறைத் தலைவர் பி.கே.தத்தா, திரைப்பட நடிகர் ராஜேஷ் கண்ணா ஆகியோரைக் களமிறக்கியது. இருந்தும், காங்கிரஸால் அத்வானியையோ, பா.ஜ.கவையோ தோற்கடிக்க முடியவில்லை.
Loading...
தற்போது, அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் களமிறக்கியிருக்கும் வேட்பாளர் சி.ஜே.சாவ்டா. தாகுர் சாதியைச் சேர்ந்தவர். தற்போது, வடக்கு காந்தி நகரின் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். காந்திநகரில் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அதனால், காங்கிரஸ் அவரைக் களமிறக்கியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு உதவி ஆட்சியராக இருந்தவர். பொதுவாகவே, தாகுர் மக்களின் வாக்கு, காங்கிரஸுக்கான பிரதான வாக்கு வங்கியாக இருந்துவருகிறது. தற்போது, தாகுர் சாதியைச் சேர்ந்தவரை களமிறங்கியதன் மூலம், அந்த வாக்கை மொத்தமாக பெறலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது.

அமித்ஷாவுக்கு எதிராக களமிறங்குவது குறித்து பேசிய சி.ஜே.சாவ்டா, ‘இதனை, அமித்ஷாவுக்கும், சாவ்டாவுக்கு இடையேயான போட்டி என்று அழைக்கவேண்டாம். இது காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கும் இடையிலான போட்டி. அவர், பா.ஜ.கவின் தேசியத் தலைவராக இருந்தால் எதற்காக பாதுகாப்பான தொகுதியில் போட்டியிடுகிறார். எங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்தப் பேரணி, எல்லாம் பா.ஜ.கவுக்கு சாதகமாக இல்லை என்பதை காட்டியுள்ளது’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு கடும் பின்னடைவாக அமைந்தது. குஜராத் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது. காந்தி நகர் தொகுதியில் பா.ஜ.க தலைவர் 70 சதவீத வாக்குகளுடன் 8 லட்சத்து 94 ஆயிரம் வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் சி.ஜே.சாவ்டாவை விட 5 லட்சத்து 50 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...