உக்ரைனில் இந்தியர்கள் இன்னும் உள்ளதாகவும், அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இந்தியா வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்டுள்ளது. இதில் உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி நாடுகளுக்கு இந்தியர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் இந்தியா கொண்டு வரப்பட்டனர்.
இதேபோன்று போர் பாதிப்பு ஏற்பட்டிருந்த கீவ் போன்ற நகரங்களிலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க - 'மது குடிப்பவர்கள் இந்தியர்களே கிடையாது; அவர்கள் மகா அயோக்கியர்கள்' - நிதிஷ் குமார் கடும் தாக்கு
இந்நிலையில் ஆபரேஷன் கங்கா குறித்தும், இந்தியர்கள் யாரேனும் உக்ரைனில் உள்ளது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் மீனாக்ஷி லேகி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது-
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரை மொத்தம் 22,500 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர். இன்னும் சுமார் 50 பேர் அங்கிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இந்தியா திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.
இதையும் படிங்க - நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன.. ஒன்றை மட்டும் நீட்டித்துள்ளது மத்திய அரசு
கொரோனா பாதிப்பின்போது, இந்தியாவுக்கு உள்ளேயும், இந்தியாவுக்கு வெளியேயும் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சுமார் 2.97 கோடி பயணிகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கையாண்டுள்ளது. ஆப்கன் பிரச்னை நடந்தபோது ஆபரேஷன் தேவி சக்தியின் கீழ் மொத்தம் 669 பேர் மீட்டுக் கொண்டு வரப்பட்டனர்’
என்று அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.