• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாரம்பரிய முறையில் விழாக்கோலமாக நடந்த வளர்ப்பு நாய்களின் திருமணம்: கேரளாவில் நடந்த ருசிகர சம்பவம்

பாரம்பரிய முறையில் விழாக்கோலமாக நடந்த வளர்ப்பு நாய்களின் திருமணம்: கேரளாவில் நடந்த ருசிகர சம்பவம்

பாரம்பரிய முறையில் விழாகோலமாக நடந்த வளர்ப்பு நாய்களின் திருமணம்: கேரளாவில் நடந்த ருசிகர சம்பவம்

பாரம்பரிய முறையில் விழாகோலமாக நடந்த வளர்ப்பு நாய்களின் திருமணம்: கேரளாவில் நடந்த ருசிகர சம்பவம்

கேரளாவில் மனிதர்களை போல் முறைப்படி வரன் பார்த்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    திரிசூர் மாவட்டம் வாடானப்பள்ளி பகுதியில் வளர்ப்பு நாய்களான ஆசிடும், ஜான்விக்கும் தருமணம் நடந்துள்ளது.

    பிகிள் இனத்தை சேர்ந்த ஆசிட் என்ற நாய்க்கு அதன் உரிமையாளர்களான ஆகாஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக துணையை தேடி அலைந்து வந்துள்ளனர். கடைசியில் புன்னையூர் குளம் என்ற பகுதியில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒருவரிடம் ஜான்வி என்ற துணைவியை கண்டு பிடித்து விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

    இதையடுத்து, ஆகாஷ் மற்றும் அர்ஜுனின் தாய், தந்தை அவர்கள் விருப்பத்திற்கு இணங்க, தற்போது மனிதர்களுக்கு திருமணம் நடப்பது போல், அனைத்து வகையான ஏற்பாடுகளுடன் திருமண பந்தலில் விழாக்கோலமாக திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    அதன்படி, நாய்களுக்கு பட்டு புடவை, புத்தாடைகள் அணிவித்து, மாங்கல்ய மாலைகள் மாற்றி, திருமண கேக் வெட்டி திருமணத்தை நடத்தியுள்ளனர். இந்த திருமண விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்து என அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்து மனிதர்களின் திருமணம் போலவே நடத்தினர்.

    இதையடுத்து, ஆகாஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோர் ஒன்றரை ஆண்டுகளாக தேடி, தேடி கடைசியில் ஆசிட் என்ற தங்களது செல்ல பிராணிக்கு, அதற்கு ஏற்றது போல் துணைவியை கண்டு பிடித்து திருமணம் செய்து வைத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.



    ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததும் ஆசிட் மற்றும் ஜான்விக்கு ப்ரீ வெடிங் வீடியோ மற்றும் சேவ் தி டேட் போட்டோஸ் எடுக்கப்பட்டு அது வைரல் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

    சுற்றுலா மாளிகை ஒன்று வாடகைக்கு எடுத்து ஆடம்பரமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி புதுமண தம்பதிகளின் நண்பர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் நடைபெற்ற இந்த ருசிகர சம்பவம் காண்போரை நெகிழ வைத்தது.

    மனிதன், சக மனிதர்களையே மதிக்காத இந்த உலகில் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிக்கு, தங்கள் பிள்ளைகளை போல பாசம் காட்டும் குடும்பம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

    செய்தியாளர் - சஜ்ஜய குமார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: