ஆக்ஸிஜன் கண்டெய்னர்களை சுமந்து செல்லும் இந்திய விமானப் படை விமானங்கள்!

ஆக்ஸிஜன் கண்டெய்னர்களை சுமந்து செல்லும் இந்திய விமானப் படை விமானங்கள்!

விமானப் படை

ஆக்ஸிஜன் கண்டெய்னர்கள் வான் வழியாக அனுப்பப்படுவதால் தற்போது 3 நாட்கள் வரை நேரம் மிச்சம் ஆவதாக தெரியவந்துள்ளது.

  • Share this:
கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருந்தாலும் கூட சமீபத்தில் கொரோனாவின் 2வது அலை தீவிரம் காட்டியுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது நிலைமை பல மடங்கு மோசமாக சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் தினந்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதும், 2,000க்கு மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

கொரோனாவின் 2வது அலை நாட்டின் மருத்துவ, சுகாதார கட்டமைப்பை சின்னாப்பின்னம் ஆக்கி வருகிறது. இதன் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் தங்களின் உயிரை பனயமாக வைத்தும் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் தற்போது தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் நோயாளிகளுக்கு அடிப்படை தேவையாக இருக்கும் ஆக்ஸிஜனுக்கு திடீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளது. இது ஒரு போர் சூழலுக்கு சற்றும் குறைவில்லாத நிலையை உருவாக்கி இருக்கிறது.



இதன் காரணமாக ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஆக்ஸிஜன் சப்ளையை துரிதப்படுத்துவதற்காக இந்திய விமானப் படை கொரோனாவுக்கு எதிரான போரில் களம் கண்டுள்ளது.



ஆக்ஸிஜன் சப்ளையை துரிதப்படுத்துவதற்காக காலியான ஆக்ஸிஜன் கண்டெய்னர்களை விமானப்படை விமானங்கள் சுமந்து செல்லும் பணியை தொடங்கியுள்ளன. விமானத்தில் திரவ ஆக்ஸிஜனை சுமந்து செல்வது என்பது மிகவும் ரிஸ்க் என்பதால் தற்போது ரீசார்ஜ் செய்வதற்காக காலியான கண்டெய்னர்களை மட்டும் சுமந்து சென்று சேர்க்கும் பணியில் விமானப்படையைச் சேர்ந்த C-17, IL-76, C-130 J, AN-32 மற்றும் AVROS விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் சாலை மார்க்கமாகவே ஆக்ஸிஜன் சப்ளை நடைபெறுவது குறைக்கப்பட்டு நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஹைதராபாத்தில் இருந்து ஒடிசாவிற்கும், பெங்களூருவின் டிஆர்டிஓ மையத்தில் இருந்து ஆக்ஸிஜன் கண்டெய்னர்கள் அதிக பாதிப்பை சந்தித்து வரும் டெல்லிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளான.
ஏப்ரல் இறுதியில் கொரோனா 2ம் அலை உச்சகட்டத்தை எட்டும் - பிரதமரின் அறிவியல் ஆலோசகர் தகவல்

 

கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது, உரிய நேரத்தில் கவனிக்கப்படாமல் இருந்தால் விபரீதம் ஏற்பட்டுவிடும் சூழல் தற்போது நிலவுகிறது. இது அறிகுறி இல்லாமல் இருப்போரிடையுமே ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற சூழலில் விமானப் படையினரின் செயல் பாராட்டுக்குரியதாகவே அமைந்துள்ளது.
Published by:Arun
First published: