Home /News /national /

இந்தியாவில் பெண் தொழிலாளர் வருமானம் 18% ஆக குறைவு.. அதிர்ச்சி ரிப்போர்ட்...

இந்தியாவில் பெண் தொழிலாளர் வருமானம் 18% ஆக குறைவு.. அதிர்ச்சி ரிப்போர்ட்...

இந்தியாவில் பெண் தொழிலாளர் வருமானம் 18% ஆக குறைந்துள்ளது, அதேநேரத்தில் சர்வதேச அளவிலான வருவாயில் பாலின வேற்றுமை உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பெண் தொழிலாளர் வருமானம் 18% ஆக குறைந்துள்ளது, அதேநேரத்தில் சர்வதேச அளவிலான வருவாயில் பாலின வேற்றுமை உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பெண் தொழிலாளர் வருமானம் 18% ஆக குறைந்துள்ளது, அதேநேரத்தில் சர்வதேச அளவிலான வருவாயில் பாலின வேற்றுமை உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

    கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரை கணக்கிடப்பட்ட இந்த அறிக்கை 180 நாடுகளை உள்ளடக்கி உள்ளது.

    இதுதொடர்பாக உலக சமத்துவமின்மை அறிக்கை 2022ல், கூறப்பட்டுள்ளதாவது, பெண்களின் வருவாய் பங்கு 10% முதல் 45% வரையில் நாடுகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. உலகம் முழுவதும் 50%க்கும் குறைவாகவே இந்த விகிதம் உள்ளது. இந்தியாவில் தொழிலாளர் வருவாயில் ஆண்களுக்கு 82% கிடைக்கும்போது பெண்களுக்கு அது 18% என்ற அளவில் உள்ளது என அதிர்ச்சி தெரிவிக்கிறது.

    இது, கடந்த 2019ம் ஆண்டில் ஆசியாவின் சராசரியான 27% என்ற அளவை விடவும் குறைவு ஆகும். இந்தியாவில் இது 18.3% ஆகவும், அண்டை நாடுகளான பூடான் (17.5%), வங்காளதேசம் (16.9%), பாகிஸ்தான் (7.4%) மற்றும் ஆப்கானிஸ்தான் (4.2%) ஆகிய நாடுகளில் இதனை விடவும் குறைவாகவும் உள்ளது.

    எனினும் நேபாளம் (23.2%), இலங்கை (23.3%) மற்றும் சீனா (33.4%) ஆகிய நாடுகளில் சற்று அதிக அளவிலான விகிதம் காணப்படுகிறது.

    உலக வங்கி மதிப்பீட்டின்படி, 2005ம் ஆண்டில் 26% ஆக இருந்த இந்த விகிதம், 2019ம் ஆண்டில் 20.3% ஆக வீழ்ச்சி கண்டது. கடந்த 2020ம் ஆண்டு ஜூலை-செப்டம்பர் வரையிலான பெருந்தொற்று காலகட்டத்தில் இந்த விகிதம் 16.1% என பெருமளவில் குறைந்தது.

    Also Read : வறுமையின் காரணத்தால் படிப்பை கைவிட்டு, டீ விற்ற நபர் தற்போது பேராசிரியராக பணிபுரிகிறார்! இவரின் உண்மை கதை இதோ!

    உலக அளவில் பெண்களுக்கான வருவாய் விகிதம் (45%) அதிகம் கொண்ட நாடாக மோல்டாவா உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் சராசரியாக 15% என்ற அளவில் உள்ளது. ஏமன் நாடு மிக குறைந்த பெண்களுக்கான வருவாய் விகிதம் (1%) கொண்ட நாடாக உள்ளது.

    வேலையின் வழியே பெண்களுக்கு கிடைத்த ஒட்டு மொத்த வருவாய், கடந்த 1990ம் ஆண்டில் 30% என்ற அளவிலும், இன்றைய தினம் 34% என்ற அளவிலும் உள்ளது. வேலை செய்வதில் பெண்களின் பங்கு பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. எனினும், பெண்களின் பணிக்கான வருவாய் பங்கு என்பது இன்னும் மிக குறைந்த அளவிலேயே காணப்படுகிறது என்று அறிக்கை தெரிவித்து உள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: India

    அடுத்த செய்தி