Home /News /national /

கிராமங்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க, பாலைவனத்தில் பயணம் செய்த பெண் சுகாதார ஊழியர்

கிராமங்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க, பாலைவனத்தில் பயணம் செய்த பெண் சுகாதார ஊழியர்

பாலைவனத்தில் பயணம் செய்த சுகாதார ஊழியர்

பாலைவனத்தில் பயணம் செய்த சுகாதார ஊழியர்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்ஷுக் மாண்டவியா, ஒரு பெண் சுகாதாரப் பணியாளர் ஒட்டகத்தின் மீது சவாரி செய்யும் ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் கணக்கில் பதிவேற்றியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் செலுத்த அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து செய்து வருகிறது. ஏற்கனவே வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணியில் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சரியான போக்குவரத்து கூட இல்லாத கிராமங்களுக்கும் சென்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

தங்களின் பணியை அர்பணிப்போடு செய்பவர்கள் சிலர் தான். அவர்களில் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில், ராஜஸ்தானில் உள்ள கிராமங்களுக்கு தடுப்பூசி வழங்க, பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் செய்து தன்னுடைய பணியில் மீது கொண்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஒரு பெண் சுகாதார ஊழியர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்ஷுக் மாண்டவியா, ஒரு பெண் சுகாதாரப் பணியாளர் ஒட்டகத்தின் மீது சவாரி செய்யும் ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் கணக்கில் பதிவேற்றியுள்ளார். அந்தப்பெண், கோவிட் 19 தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பங்களிக்கும் விதமாக, ராஜஸ்தானில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கிராமத்துக்கு ஒட்டகத்தில் பயணித்தது மிகவும் பாராட்டுக்குரியது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு எவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பதற்கு இந்த சுகாதார ஊழியரின் அர்பணிப்பு, மிகச்சிறந்த உதாரணம்.

ALSO READ |  பாஜகவில் இணைந்த கிரிக்கெட் பிரபலம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

அமைச்சர் பகிர்ந்த புகைப்படம் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்னரே பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அதை நிறைவேற்றும் வகையில், பல ஊர்களிலும் சுகாதராப் பணியாளர்கள் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியை சிறப்பாக செய்து வந்தனர். மேலும், சுகாதார ஊழியர்களுடன் அந்தந்த ஊரின் தலைவர்கள், இளைஞர் அமைப்புகள், தன்னார்வலர்கள், மற்றும் மாணவர்களும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமின்றி, இந்தியாவின் தற்போதைய நிலவரப்படி கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 140.24 கோடியைத் தாண்டியுள்ளது (1,40,24,47,922) என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்தது.

நாட்டில், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தற்போது வரை 600க்கும் மேற்பட்ட நபர்கள் ஒமைக்ரான் வேரியன்ட் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளன. ஒமைக்ரான் வேரியன்ட்டால் மகாராஷ்டிராவில் 88 நபர்களும், டெல்லியில் 67 நபர்களும், தெலுங்கானாவில் 38 நபர்களும், தமிழ்நாட்டில் 34 நபர்களும், கர்நாடகாவில் 31 நபர்களும் மற்றும் குஜராத்தில் 30 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 



 

 

தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 122 நபர்கள் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை அதிகபட்சமாக, 358 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 114 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Covid-19 vaccine, Rajasthan, Vaccination

அடுத்த செய்தி