செலவுக்கு ரூ.50-க்கு மேல கேட்டால் கணவர் அடிக்கிறார் - போலீசில் ஜி.எஸ்.டி பெண் அதிகாரி புகார்

மாதிரிப்படம்

கூடுதலாக செலவுக்கு பணம் கேட்டதால் கணவன் தாக்கியதாக ஜி.எஸ்.டி பெண் அதிகாரி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 • Share this:
  குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் சந்த்கேஹ்டா பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான பெண். அவர், ஜி.எஸ்.டி அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிந்துவருகிறார். அவர், காவல்நிலையத்தில் அவரது கணவர் மீது புகார் அளித்துள்ளார். புகாரில் அவர், ‘2011-ம் ஆண்டு எனது கணவருடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து விரைவில் எனக்கு ஜி.எஸ்.டி துறையில் உதவியாளராக வேலை கிடைத்தது. பணத்தை மிச்சப்படுத்துவதற்காக வேலைக்கு பேருந்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று கணவரால் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

  ஒவ்வொரு நாளும் எனக்கு செலவுக்கு எனது கணவர் 50 ரூபாய் பணம் கொடுப்பார். நாள் ஒன்றுக்கு நான் 50 ரூபாய்க்கு கூடுதலாக செலவு செய்வதற்கு என்னுடைய கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கமாட்டார்கள். ஒருவேளை நான் அதனை மீறிவிட்டால் அவர்கள் என்னை கடுமையாக அடிப்பார்கள். மேலும், எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளது என்று கணவர் சந்தேகப்பட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அலுவலகத்துக்கு செல்லும்போது நான் நல்ல ஆடை உடுத்த அவர் அனுமதிக்கமாட்டார். ஆகஸ்ட் 15-ம் தேதி என்னுடைய கணவர் என்னை கடுமையாகத் தாக்கினார். அதனால், நான் என்னுடைய அப்பா வீட்டுக்கு சென்றுவிட்டேன். பின்னர், கணவரின் குடும்பத்தார் வீட்டுக்கு வந்து என்னை சமாதானம் செய்து கூட்டிச் சென்றனர். பின்னர், வீட்டுக்கு அழைத்துச் சென்று அடித்தனர்’ என்று புகார் அளித்துள்ளார்.

  இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.
  Published by:Karthick S
  First published: