Home /News /national /

கடனால் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ்: பரிதாபப்பட்ட விஜய் மல்லையா!

கடனால் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ்: பரிதாபப்பட்ட விஜய் மல்லையா!

(Image: Reuters)

(Image: Reuters)

’ நாடே பெருமை கொள்ளும் விதமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வளர்த்தெடுத்த நரேஷ் மற்றும் நீடா கோயலுக்கு எனது அனுதாபங்கள். '

  • News18
  • Last Updated :
‘‘கடனால் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் மல்லையா தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘‘ஜெட் ஏர்வேஸ்-க்கு ஒரு நியாயம் தனியார் விமான நிறுவனங்களுக்கு ஒரு நியாயம் என்றே அரசு செயல்படுகிறது” என நாட்டைவிட்டு தப்பியோடிய விஜய் மல்லையா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து பல ட்வீட்டுகள் மூலம் தான் கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பவதாகவும், இந்திய பொதுத்துறை வங்கிகள் அவற்றை ஏன் ஏற்க மறுக்கின்றன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.



மற்றொரு ட்வீட்டில், “கிங் ஃபிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு மிகப்பெரும் போட்டியாக இருந்த நிறுவனம் ஜெட் ஏர்வேஸ். நாடே பெருமைகொள்ளும் விதமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வளர்த்தெடுத்த நரேஷ் மற்றும் நீடா கோயலுக்கு எனது அனுதாபங்கள். முக்கிய நகரங்களுக்கான தொடர்பு வசதி, நல்ல சேவை. பாவம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், “நான் 100 சதவிகித கடனையும் திருப்பிச் செலுத்தத் தயார் என்று கூறும்போதெல்லாம் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு நான் நாடு கடத்தப்படுவது குறித்து பயந்து, மிரண்டு போயுள்ளதாக செய்திகள் வெளியிடுகின்றன. இந்திய ஊடகங்கள். லண்டன் சிறையோ இந்தியச் சிறையோ நான் பணத்தை செலுத்திவிடுகிறேன். முதலில் நான் தருவதாக சொன்னாலும் வங்கிகள் ஏன் வாங்க மறுக்கின்றன?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பார்க்க: பணம் பறிமுதல் செய்யப்பட்ட இடம் அதிமுகவுக்கு சொந்தமானது - தங்க தமிழ்ச்செல்வன்





தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Rahini M
First published:

Tags: Jet Airways, Vijay Mallya

அடுத்த செய்தி