Home /News /national /

சச்சின், அமிதாப் பச்சன் போல உணர்கிறேன் - குஜராத் வரவேற்பு குஷியில் போரிஸ் ஜான்சன் ட்வீட்

சச்சின், அமிதாப் பச்சன் போல உணர்கிறேன் - குஜராத் வரவேற்பு குஷியில் போரிஸ் ஜான்சன் ட்வீட்

குஜராத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பால் தான் சச்சின், அமித்தாப் பச்சன் போல உணர்கிறேன் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பால் தான் சச்சின், அமித்தாப் பச்சன் போல உணர்கிறேன் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பால் தான் சச்சின், அமித்தாப் பச்சன் போல உணர்கிறேன் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான நேற்று குஜராத் சென்ற போரிஸ் ஜான்சனை மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் ஆகியோர் வரவேற்றனர். குஜராத்திய பராம்பரிய முறையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் இருந்து அவரது ஹோட்டலுக்கு செல்லும் வழியில் பிரம்மாண்ட வரவேற்பு வழி நெடுங்கிலும் வழங்கப்பட்டது.

  பின்னர் குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் சென்ற போரிஸ் ஜான்சன் அன்னல் காந்தி பயன்படுத்திய நூற்பு ராட்டினத்தை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் .பின்னர் வதோதராவில் ஜெபிசி இயந்திர தொழிற்சாலையை போரிஸ் திறந்துவைத்தார். குஜராத் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று டெல்லி வந்த போரிஸ் அங்குள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

  இதையும் படிங்க: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பார்வையிட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் - இந்தியா கடும் கண்டனம்

  இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள போரிஸ் ஜான்சன், "எனக்கு மகத்தான வரவேற்பு வழங்கிய பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. எனக்கு வழங்கப்பட்டுள்ள வரவேற்பை பார்க்கும் போது நான் சச்சின் டென்டுல்கர் போலவும், அமிதாப் பச்சன் போலவும் உணர்கிறேன். வழிநெடுகிலும் என்னை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு எனது ஸ்பெஷல் நண்பரான மோடிக்கு நன்றி" என்றுள்ளார்.

  பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளரிடம் பேட்டியளித்தனர். அதில் பிரதமர் மோடி, " இந்தியா தற்போது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிவரும் வேளையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் இந்தியா வந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது வரலாற்று நிகழ்வாகும்.  இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம், கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டங்கள் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்தப்படும். ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை அமைதியை நிலைநாட்ட வேண்டும் என இந்தியாவும் பிரிட்டனும் விரும்புகிறது என்றார்.

  செய்தியாளர்களிடம் பேசிய போரிஸ், " வரும் தீபாவளிக்கும் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற நாங்கள் முனைப்பு காட்டி வருகிறோம். இதற்காக எனது அதிகாரிகளிடம் நான் காலக்கெடு நிர்ணயித்துள்ளேன். இந்தியா எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பல பொருள்களின் விலையை குறைத்துள்ளது. பதிலுக்கு நாங்களும் விலையை குறைத்து தர முன்வந்துள்ளோம். இரு நாடுகளும் சுகாதாரத்துறையில் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் கோவிட் தொற்றை ஒன்றிணைந்து எதிர்கொண்டது. இந்தியாவின் தடுப்பூசி பங்களிப்பு மகத்தானது. இந்தியாவின் சீரம் நிறுவனமும், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ரா செனெக்கா நிறுவனமும் இனைந்து தயாரித்த கோவிட் தடுப்பூசியை பிரிட்டனில் பலர் பயன்படுத்தியுள்ளனர். எனது தோளில் கூட இந்தியாவின் தடுப்பூசி தான் செலுத்தப்பட்டுள்ளது" என்றார்.

  பிரிட்டன் நாட்டில் சுமார் 50 லட்சம் மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும், இரு நாடுகளும் பாதுகாப்பு மற்றும் மாற்று எரிசக்தியில் முக்கிய கவனம் செலுத்தி ஒருங்கிணைந்து செயல்படவுள்ளதாக இரு நாட்டு தலைவரும் கூட்டாக அறிவித்தனர்.
  Published by:Kannan V
  First published:

  Tags: Boris johnson

  அடுத்த செய்தி