ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை - அதிர்ச்சி சம்பவம்

பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை - அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சிறுமியிடம் நீ பிறந்த போதே உனது தாய் இறந்து விட்டார் என கூறி அவரை மன வேதனைக்குள்ளாக்கி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Maharashtra | Tamil Nadu

  மகாராஷ்டிராவில் பெற்ற மகளை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  மும்பை, மகாராஷ்டிராவின் மும்ப்ரா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, துணிச்சலாக போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தந்தை தன்னை பல முறை வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவரது தந்தை, சிறுமியிடம் நீ பிறந்த போதே உனது தாய் இறந்து விட்டார் என கூறி அவரை மன வேதனைக்குள்ளாக்கி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

  எப்போதெல்லாம் அவருக்கு ஆசை வருகிறதோ அப்போதெல்லாம் சிறுமியிடம் இதனை கூறி வன்கொடுமை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த சிறுமி, என்ன நடந்தாலும் பரவாயில்லை என முடிவெடுத்து, போலீசில் துணிச்சலாக புகார் அளித்துள்ளார்.

  இதையும் படிங்க | இராமநாதபுரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது...

  இதனை தொடர்ந்து போலீசார், சிறுமியின் தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரு வாரத்திற்கு போலீசாரின் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெற்ற மகளையே  பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தையின் செயல் பலரையும் அதிர்ச்சியில் உறைய செய்கிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Child Abuse, Crime News, Sexual abuse, Sexual harrasment