ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டம் வடமாலாபேட்டா மண்டலம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ஐஸ்வர்யா. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ள நிலையில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்த ரமேஷ் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு தகராறு ஈடுபட்டு வந்தார்.
எனவே மனைவியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று நினைத்த ரமேஷ் தங்களுடைய மகன் மகேஷை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் நேற்று தங்களுடைய 9 வயதான மகன் மகேஷிற்கு பூச்சி மருந்தை கட்டாயப்படுத்தி பலவந்தமாக குடிக்க கொடுத்தார். இதனை கண்ட ரமேஷ்ஷின் தாய் உடனடியாக தனது பேரனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு மகேசிற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தன்னுடைய திட்டம் தோல்வியில் முடிந்ததால் ஆவேசம் அடைந்த ரமேஷ் மகன் மகேசிடம் தாய் எங்கே என கேட்டு வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து அவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:
பரபரப்பான சாலையில் இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
இதனைக் கண்ட அருகில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரமேஷை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ரமேஷ் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாக பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.