முகப்பு /செய்தி /இந்தியா / தந்தையின் வக்கிரம்.. மகனுடன் சேர்ந்து மகளை பலாத்காரம் செய்த கொடூரம்..

தந்தையின் வக்கிரம்.. மகனுடன் சேர்ந்து மகளை பலாத்காரம் செய்த கொடூரம்..

மாதிரி படம்

மாதிரி படம்

தனது தந்தை தன்னை பல முறை பாலியல் வன்புணர்வு செய்திருப்பதாகவும், தான் தூங்கிய பின்னர் தந்தை தினமும் என்னை பாலியல் வன்கொடுமை செய்வார் என உறவினர் ஒருவரிடம் மாணவி உரையடும் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பள்ளிக்கு செல்லும் மகளை, மகனுடன் சேர்ந்து தந்தை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பள்ளிக்கு செல்லும் வயதுடைய சிறுமிகள், பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகியிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பெற்ற தந்தையே, மகனுடன் சேர்ந்து மகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது அதிர்ச்சியில் உறைய வைப்பதாக அமைந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது தந்தை மற்றும் சகோதரனால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி வருவதாக, பள்ளியின் ஆசிரியர் ஒருவரிடம் தெரிவித்ததன் அடிப்படையில், இது தொடர்பாக அந்த மாணவியை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு சென்ற ஆசிரியர், இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

தனது தந்தையும், சகோதரனும் சேர்ந்து கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக அந்த மாணவி போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். தனக்கு நேர்ந்த அவலத்தை போலீசாரிடம் அந்த மாணவி விவரித்த நிலையில், தந்தை மற்றும் சகோதரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் இருவரையும் வரும் ஜனவரி 22ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Also read:  3 லட்சம் மரணங்களுக்கு வாய்ப்பு.. 2,000 எலிகளை கொல்ல உத்தரவு - உலக நாடுகளில் கொரோனா சூழல் இதுதான்!

வேலியே பயிரை மேய்ந்தது போல பெற்ற தந்தையே, மகனுடன் சேர்ந்து மகளை பலாத்காரம் செய்த சம்பவம் கலங்கச் செய்வதாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே போல பெற்ற மகளை தந்தை பாலியல் வன்புணர்வு செய்த தகவல் வெளியான நிலையில், சிறுமியின் சகோதரன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்தான். ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி, தனது தந்தை தன்னை பல முறை பாலியல் வன்புணர்வு செய்திருப்பதாகவும், அந்த கொடுமை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், தான் தூங்கிய பின்னர் தந்தை தினமும் என்னை பாலியல் வன்கொடுமை செய்வார் என உறவினர் ஒருவரிடம் மாணவி உரையடும் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது.

Also read:  அண்ணி குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த மைத்துனர்

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் இதை கேள்விப்பட்டு நர்மதா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

First published:

Tags: Gang rape, Rape