Home /News /national /

தன் சாயலில் இல்லை என 2 மாத பெண் குழந்தையை கொலை செய்த தந்தை!

தன் சாயலில் இல்லை என 2 மாத பெண் குழந்தையை கொலை செய்த தந்தை!

Andhra

Andhra

உன்னுடைய நடத்தை மீது சந்தேகம் உள்ளது என்று மல்லிகார்ஜுன, அடிக்கடி தனது மனைவி  சிட்டம்மாவுடன் தகராறு செய்து வந்தார்.

    மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தன்னுடைய சாயலில் இல்லாத 2மாத பெண் குழந்தையை படுகொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண துர்க்கம் நகரை சேர்ந்த தம்பதி மல்லிகார்ஜுனா, சிட்டம்மா அவர்களுக்கு 2 மாத வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்த நிலையில் குழந்தைக்கு தன்னுடைய சாயலும் இல்லை, தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் சாயலும் இல்லை. எனவே உன்னுடைய நடத்தை மீது சந்தேகம் எனக்கு உள்ளது என்று மல்லிகார்ஜுன, அடிக்கடி தனது மனைவி  சிட்டம்மாவுடன் தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று குழந்தையை அழைத்து கொண்டு 2 பேரும் மருத்துவமனைக்கு சென்று இருந்தனர் அப்போது அழுத குழந்தையை நான் தூக்கி வைத்துக் கொள்கிறேன் என்று கூறி வாங்கி சென்ற மல்லிகார்ஜுனா அருகிலுள்ள ஏரிக்கரைக்கு சென்று குழந்தையின் வாயில் பிளாஸ்டர் ஒட்டி மூச்சுத்திணற செய்து கொலை செய்தான். பின்னர் அந்த குழந்தையை பை ஒன்றில் வைத்து ஏரியில் வீசி விட்டான். குழந்தையுடன் கணவன் காணாமல் போனதால் சந்தேகமடைந்த சிட்டம்மா இதுபற்றி போலீசில் புகார் அளித்தார்.

    Also read: மேற்குவங்கத்தில் ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்ந்த கொரோனா பரவல்!

    வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அனந்தபூரில் மல்லிகார்ஜுனவை கைது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவுக் குழந்தை தன்னுடைய சாயலிலும் இல்லை, தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் சாயலிலும் இல்லை.எனவே அதனை கொலை செய்தேன் என்று கூறினான்.

    குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Andhra Pradesh, Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி