Home /News /national /

10 வயது மகனை கொலை செய்த தந்தை: சடலத்தை அப்புறப்படுத்த உதவிய மனைவி - காதலி!

10 வயது மகனை கொலை செய்த தந்தை: சடலத்தை அப்புறப்படுத்த உதவிய மனைவி - காதலி!

murder

murder

காதலியுடன் சேர்ந்து மகனை கொலை செய்துவிட்டு மாதக்கணக்கில் தந்தை நாடகமாடி வந்ததும், அவருக்கு மனைவியே உதவியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளத்தொடர்பு குறித்து பேசிய 10 வயது மகனை தந்தை கொலை செய்த நிலையில், தந்தையின் காதலியும், கொல்லப்பட்ட சிறுவனின் தாயும் சடலத்தை அப்புறப்படுத்திவிட்டு எதுவும் தெரியாதது போல பல மாதங்கள் நாடகமாடி வந்ததை அறிந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பெங்களூரின் குருபனபாலயா பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் குமார் (வயது 30), இவருக்கு சிந்து (வயது 226) என்ற மனைவியும், 10 வயதில் மகன் ஒருவரும் இருக்கின்றனர். இதனிடையே கடந்த பிப்ரவரி 7ம் தேதி முதல் எங்களது மகனை காணவில்லை என கடந்த ஆகஸ்ட் 26ம் தேதியன்று சச்சின் குமார், சிந்து தம்பதியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

எந்த பெற்றோரும் தங்களின் குழந்தையை காணவில்லை என்றால் இத்தனை மாதங்கள் காலதாமதமாக வந்து புகார் அளிக்கமாட்டார்கள் என்பதால் காவல்துறையினருக்கு லேசான சந்தேகம் எழுந்தது. இருப்பினும் நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என காவல்துறையினர் தங்களின் விசாரணையை தொடங்கினர். அப்போது தான் குமாருக்கு நதியா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது போலீசாருக்கு தெரிந்தது. நதியாவும், சிந்துவும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் குமாரின் வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது.

தனது மகன் நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்து மாயமானதாக குமார் தெரிவித்திருந்த நிலையில், குமாரின் மகன் இதுவரை எனது வீட்டுக்கு வந்ததே கிடையாது என அவரது நண்பர் கூறினார்.

Also Read:  லாக் அப்பில் நிர்வாணம்: பெண் போலீசை ஈவ் டீசிங் செய்த கைதி!

இதையடுத்து குமாரையும், நதியாவையும் ஒன்றாக வைத்து விசாரித்த போது, தான் குமாரின் மகனை அவரே கொலை செய்ததும், சடலத்தை மறைக்க நதியாவும், குமாரின் மனைவி சிந்துவும் உதவியாக தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நடந்தது என்ன?

சம்பவம் நடந்த பிப்ரவரி 7ம் தேதியன்று குமாரும், நதியாவும் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது குமாரின் 10 வயது மகன் இவர்கள் இருவரின் கள்ள உறவு குறித்தும் ஏதோ கூற, அதனால் ஆத்திரம் அடைந்த குமார், மகன் என்றும் பாராமல் நதியா முன்னிலையிலேயே இரும்பு கம்பியை எடுத்து தனது மகனை தலையில் அடித்து கொலை செய்தார்.

Also Read:  769 நாள் லீவு போட்டுவிட்டு ஒரே நேரத்தில் இரட்டை சம்பளம் வாங்கிய கில்லாடி கணக்கு வாத்தியார் – ஏமாற்றியது எப்படி?

பின்னர் வேலை முடிந்து சிந்து வீட்டுக்கு வந்தபோது தனது மகன் கொல்லப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். இதன் பின்னர் சிந்துவிடம் கெஞ்சிய குமார், இந்த கொலையை மறைக்க உதவினால் நதியாவுடனான உறவை கைவிட்டுவிடுவதாக உறுதியளித்தார். இதனை ஏற்று இந்த கொலையை மறைக்க சிந்துவும் உதவியிருக்கிறார்.

நண்பர் ஒருவரிடம் இருந்து காரை இரவலாக குமார் வாங்கி வர, 10 வயது சிறுவனின் உடலை பெட்ஷீர் மற்றும் போர்வையால் சுற்றிய நதியாவும், சிந்துவும் காரில் சடலத்தை ஏற்றிக் கொண்டனர். பின்னர் மூவரும் காரில் தமிழகத்தின் பர்கூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலத்தை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் பெங்களூர் திரும்பியிருக்கின்றனர்.

Also Read:   போலி ஆவணங்கள் மூலம் இட ஒதுக்கீடு: நீதிபதி நிரந்தர பணி நீக்கம்!

மகனை காணவில்லை என அக்கம்பக்கத்திலும், சொந்தங்களிடம் இருவரும் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் சிந்துவின் குடும்பத்துக்கு இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் இருந்து வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்களின் வற்புறுத்தலின் பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் குமார் - சிந்து புகார் அளிக்கவே இத்தனை உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தற்போது 10 வயது சிறுவனை கொலை செய்த தந்தை, தாய் மற்றும் தந்தையின் கள்ளக்காதலி என மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 
Published by:Arun
First published:

Tags: Child murdered, Crime | குற்றச் செய்திகள், Illegal affair, Illegal relationship

அடுத்த செய்தி