ஹோம் /நியூஸ் /இந்தியா /

சாலையோரம் கிடந்த சூட்கேஸுக்குள் இளம்பெண் உடல்.. விசாரணையில் சிக்கிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

சாலையோரம் கிடந்த சூட்கேஸுக்குள் இளம்பெண் உடல்.. விசாரணையில் சிக்கிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

தந்தையே மகளை கொன்ற சம்பவம்

தந்தையே மகளை கொன்ற சம்பவம்

பெண்ணின் சடலத்தை அடையாளம் காண்பதற்கு அவரது புகைப்படத்தை மதுரா போலீசார்  சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். டெல்லியில் போஸ்டர்களையும் ஒட்டினார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச்சாலை அருகே கடந்த வாரம் தந்தையே மகளைக் கொன்று சூட்கேஸுக்குள் வைத்து சாலையோரம் வீசிய சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

  தெற்கு டெல்லியில் உள்ள படர்பூரில் வசிக்கும் நித்தேஷ யாதவின் மகள் ஆயுஷி சவுத்ரி. தாய் தந்தை சகோதரனோடு டெல்லியில் வசித்து வந்த ஆயுஷி டெல்லி கல்லூரி ஒன்றில் BCA படித்து வந்தார்.

  ஆயுஷி தனது குடும்பத்தினரிடம் கூறாமல் வேறு சாதியைச் சேர்ந்த சத்ரபால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு, வீட்டிற்கு தெரியாமல் வெளியே வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

  அவளது பிடிவாதத்தைக் கண்டு அவளுடைய பெற்றோர் கோபமடைந்துள்ளனர். அதில் ஆத்திரமடைந்த நித்தேஷ தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் ஆயுஷியை சுட்டுக் கொன்றுள்ளார். பிறகு, நித்தேஷ் யாதவ் ஆயுஷி உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து மதுராவில் உள்ள சாலையோரம் வீசியுள்ளார்.

  இதையும் படிங்க: 9 குழந்தைகளுடன் சைக்கிளில் பயணித்த நபர் - வைரலாகும் வீடியோ.!

  கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத ஒரு சிவப்பு சூட் கேஸ் சாலையோரம் கண்டுபிடிக்கப்பட்டு திறந்து பார்த்த பொது பெண்ணின் பிணம் இருந்துள்ளது. அதை கைப்பற்றிய போலீசார், அந்த பெண் குறித்து விசாரிக்க தொடங்கினர். அந்த   சடலத்தின் முகம் மற்றும் தலையில் ரத்தம் இருந்துள்ளது. உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

  அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தனர். அந்த பெண்ணின் தொலைபேசி கண்டெடுக்கப்பட்டது. பின்னர் பெண்ணின் சடலத்தை அடையாளம் காண்பதற்கு அவரது புகைப்படத்தை மதுரா போலீசார்  சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். டெல்லியில் போஸ்டர்களையும் ஒட்டினார்கள்.

  இதையும் படிங்க: பொம்மையை திருமணம் செய்துவிட்டு புலம்பும் பெண்.. குழப்பத்தில் இணையவாசிகள்!

  இதனை அடுத்து, அவளைப் பற்றிய உறுதியான தகவல் ஞாயிற்றுக்கிழமை காலை தெரியாத அழைப்பிலிருந்து பெறப்பட்டது. அதன் பின்னர் ஆயுஷியின் தாய் மற்றும் சகோதரர் அவரை அடையாளம் காட்டினார்.

  அடையாளம் காட்ட வந்த தந்தையின் செயல்பாடுகளில் இருந்த சந்தேகத்தின் பேரில் அவரை தனியே விசாரித்தனர். அப்போது தான் வேற்று சாதியினரை திருமணம் செய்து தனக்கு தெரியாமல் வெளியே வாழ்ந்து வந்த தன் மகள் பெல் கொண்ட ஆத்திரத்தால் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

  பின்னர் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Murder case, Uttar pradesh