ஹோம் /நியூஸ் /இந்தியா /

த்ரிஷ்யம் படம் பார்த்துவிட்டு அதே பாணியில் தந்தையை கொலை செய்த மகன்கள்!

த்ரிஷ்யம் படம் பார்த்துவிட்டு அதே பாணியில் தந்தையை கொலை செய்த மகன்கள்!

த்ரிஷ்யம் படம் பார்த்துவிட்டு அதே பாணியில் தந்தையை கொலை செய்த மகன்கள்

த்ரிஷ்யம் படம் பார்த்துவிட்டு அதே பாணியில் தந்தையை கொலை செய்த மகன்கள்

த்ரிஷ்யம் படம் பார்த்துவிட்டு அதே பாணியில் தந்தையை கொலை செய்த மகன்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pune, India

த்ரிஷ்யம் திரைப்படம் பார்த்துவிட்டு தந்தையை கொலை செய்த மகன்களை போலீசார் கைது செய்தனர்.

புனேவைச் சேர்ந்த தனஞ்செய் நவ்நாத் பன்சோட் அங்கு ஒரு சிற்றுண்டி உணவகத்தை நடத்தி வந்தார். இவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் கடந்த 19ஆம் தேதி மலுங்கே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவருடைய செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் அவர் நாக்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் மூன்று வருடங்களாக அடிக்கடி பேசியது தெரியவந்தது. அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், தனஞ்செய் மகன்கள் கல்லூரி படிக்கும் சுஜித், 12ம் வகுப்பு படிக்கும் அப்ஜித் ஆகியோரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், தனஞ்செய்க்கு நாக்பூர் பெண்ணுடன் சமூக வலைதளம் மூலமாக தொடர்பு ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியுள்ளது. இதன் காரணமாக தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். மேலும், குடும்பத்தினர் எவ்வளவு சொல்லியும் அந்த பெண்ணுடனான உறவை கைவிட மறுத்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய மகன்கள் இருவரும் முடிவெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க;  10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளையடித்த திருடர்கள்..!

இந்த நிலையில் சுஜித், அப்ஜித் இருவரும் மலையாளத்தில் வெளியாகி இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்ட த்ரிஷ்யம் திரைப்படத்தை பார்த்துள்ளனர். ஒரு கொலையை செய்துவிட்டு அதன் வெளியில் தெரியாமல் மறைப்பதுதான் படத்தின் கதை. அதுபோலவே தங்களது தந்தையை கொன்று அதனை மறைக்க திட்டமிட்டுள்ளனர்.

டிசம்பர் 15ஆம் தேதி இரவு உறங்கிக்கொண்டிருந்த தனஞ்செய்யை இரும்பு கம்பியால் தாக்கி, தலையணையை முகத்தில் வைத்து அழுத்தியுள்ளனர். அதில் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே தனஞ்செய் உயிரிழந்தார். அவரது உடலை சிற்றுண்டி தயாரிக்கும் உலையில் வைத்து எரித்த சகோதரர்கள், சாம்பலையும் எலும்புகளையும் ஆற்றுப் பகுதியில் வீசியுள்ளனர். பின்னர் எதுவுமே தெரியாதது போல இருந்துள்ளனர். ஆனால் போலீசார் விசாரணையில் சிக்கியுள்ளனர்.

இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் மீது கொலை, தடயங்களை அழித்து அளித்து தவறான தகவல்களை அளித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

First published:

Tags: Murder