ஆயிரம் கிலோ  மீன், 200 கிலோ இறால்.. மருமகனுக்கு ஆடி சீர் செய்து அசத்திய மாமனார்..

ஆடி சீர் செய்த மாமனார்..

ஆயிரம் கிலோ  மீன், 200 கிலோ இறால், , 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புகள்என வண்டி வண்டியாக   மணமகன்   வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்து  வந்தனர்.

  • Share this:
தமிழர்கள் ஆடி சீர் கொடுத்து கொண்டாடுவதை போல் தெலுங்கு மக்கள்  ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான ஆஷாதம் (ஜூன் / ஜூலை மாதங்களில்),"பொனாலு"என்கிற ஆஷாதம் பாரம்பரிய நாட்டுப்புற விழாவை கொண்டாடுகிறார்கள்.

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில்  ஆஷாதம் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.  ஆந்திராவின்  அருகாமையில் அமைந்துள்ள புதுவையின் அங்கமான ஏனாமை சேர்ந்த  பவன் குமார் என்பவருக்கு  ராஜமுந்திரியைச் சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான சீர் கொடுத்து அசத்தியுள்ளார்.

Also Read:  கூகுள் உங்களை எல்லா இடங்களிலும் கண்காணிக்கிறதா? விளம்பர விற்பனைக்காக மின் அஞ்சல்களை படிக்கிறார்களா?

தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக கவனித்து கொள்வதால் மகிழ்ச்சி அடைந்து ஆயிரம் கிலோ  மீன், 200 கிலோ இறால், , 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புகள்என வண்டி வண்டியாக   மணமகன்   வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்து  வந்தனர். இதனை  உள்ளூர்வாசிகள் கண்டு  ஆச்சரியப்பட்டனர்.

ஆடி சீர் செய்த மாமனார்..


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்களது மகளை மிகவும் அன்புடன் மருமகன் கவனித்து வருவதால் எங்கள் அன்பை காட்டும் விதமாக சீர் செய்துள்ளோம்.. இனிப்பு,காரம்,சத்துள்ள உலர்பழங்கள், மசாலா பொருட்கள், காய்கறிகள், அசைவங்களான ஆடு, கோழி, மீன் மற்றும் கடல் உயிரினங்கள்,மளிகை பொருட்கள் என வாரி வழங்கியுள்ளோம் என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் வித்தியாசமான மாமனார் பலராம கிருஷ்ணா.
Published by:Arun
First published: