கர்நாடகாவில் ஆன்லைனில் மகள் கல்வி பயில்வதற்காக தந்தை ஒருவர் கொட்டும் மழையில் குடைபிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தனது குழந்தையின் எதிர்காலத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்து, அவர்களுக்காகவே வாழும் தந்தைகள் குறித்து அனைவரும் அறிவோம். கர்நாடகாவைச் சேர்ந்த அப்படிப்பட்ட ஒரு பாசக்கார தந்தையின் செயல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம், தக்ஷிணா கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள சுல்லியா தாலுக்காவுக்கு உட்பட்ட பலாக்கா கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு இருமகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். ஊரடங்கு காரணமாக கர்நாடகாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றனர்.
கிராமத்தில் இணைய சேவையை பெறும் வசதி மிகவும் குறைவு என்பதால் அங்குள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பெறுவதும் என்பது கடினமாகவே உள்ளது. பலாக்கா கிராமத்தில் வசிக்கும் நாராயணனின் மகளும் தனது வீட்டில் இணைய சேவை கிடைக்காததால் அங்குள்ள சாலை பகுதியில் அமர்ந்து தினமும் ஆன்லைன் மூலம் தனது வகுப்புகளை கவனித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தினமும் மாலை 4 மணியளவில் இவ்வாறு அச்சிறுமி மற்றும் பலர் அப்பகுதியில் அமர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிப்பது வழக்கமாகும். இந்நிலையில், நாராயணனின் மகள் இவ்வாறு ஆன்லைனில் கல்வி பயின்றுகொண்டிருந்தபோது திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. தனது மகளின் கல்வி பாதித்துவிடக்கூடாது என எண்ணிய நாராயணனன் தனது மகளுக்காக குடை பிடித்தப்படி நீண்ட நேரம் நின்றுள்ளார். அவரது மற்றொரு மகளும் உடன் இருந்தார். இந்த காட்சியை ஊடகவியலாளர் ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைராக பரவி வருகிறது.
மகளுக்காக கொட்டும் மழையில் குடைபிடித்தப்படி இருந்த நாராயணனுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எல்.கே.ஜி. மாணவியா? பாஜக தலைவருக்கு பதிலடி கொடுத்த இளம் மேயர்...
பலாக்கா பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் பலரும் இணையச் சேவைக்கான பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கையே சார்ந்து உள்ளனர். எனினும், இணையச்சேவை முறையாக கிடைக்காததால் ஆன்லைனில் கல்வி பயில்வது சிரமமாக உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்திலையில், அப்பகுதியில் இணைய சேவை குறைபாட்டை சரி செய்ய முயன்று வருவதாக பி.எஸ்.என்.எல். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Father's Day, Karnataka, Online class