ஹோம் /நியூஸ் /இந்தியா /

மாற்றுத்திறனாளி மகளுக்கு உணவு கொடுக்க ரோபோவை உருவாக்கிய தந்தை..!

மாற்றுத்திறனாளி மகளுக்கு உணவு கொடுக்க ரோபோவை உருவாக்கிய தந்தை..!

தந்தை பிபின் கதம் மற்றும் அவரின் மகள்

தந்தை பிபின் கதம் மற்றும் அவரின் மகள்

கூலித் தொழிலாளி தந்தை மாற்றுத்திறனாளி மகளுக்காக ரோபோவை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Goa, India

  கோவாவில் கூலித் தொழிலாளியாகப் பணி செய்யும் ஒருவர் தனது மாற்றுத்திறனாளி மகளுக்குச் சரியான நேரத்தில் உணவு கொடுத்து ஊட்டிவிடும் வகையில் ரோபோ ஒன்றைத் தயாரித்துள்ளார்.

  தெற்கு கோவாவின் போண்டா தாலுகாவில் உள்ள பெத்தோரா கிராமத்தில் வசிக்கும் 40 வயது தந்தை பிபின் கதம். இவருக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். மகளால் தானாக சாப்பிட முடியாது. அவரின் மனைவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுப் படுக்கையில் இருக்கும் நிலையில் மகளுக்குத் தினமும் வேலைக்குச் சென்று விட்டு வந்து அவர் உணவு ஊட்டிவிடுவார்.

  இந்த நிலையில் அவரால் சரியான நேரத்தில் மகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை. அவரின் மனைவியும் இதனை நினைத்து மிகவும் வருத்தமடைந்துள்ளனர். இதனால் அவர் இணையத்தில் உணவு வழங்கும் ரோபோவை தேடியுள்ளார்.

  ஆனால் அந்த மாதிரி எந்த விதரோபோவும் கிடைக்கவில்லை. எனவே தானே ஒரு ரோபோவை உருவாக்க முடிவு செய்துள்ளார். அதற்காகத் தினமும் வேலை முடித்துவிட்டுப் பல மணி நேரங்கள் செலவு செய்து 4 மாதங்களில் ஒரு அற்புதமான தானாக உணவு அளிக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளார்.இதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக அவர் ரோபோ உருவாக்குவதற்கு எந்த வித படிப்பும் படித்தது இல்லை. இணையத்தில் தகவல்களைப் படித்துத் தான் அந்த ரோபோவை உருவாக்கியுள்ளார்.

  இது குறித்துப் பேசிய அவர், தனது மகள் சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொண்டு நான் வீட்டுக்கு வரும் போது என்னைப் பார்த்துச் சிரிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்த ரோபோ மூலம் என் மகள் மாறியுள்ள இதர குழந்தைகளுக்கும் உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

  தன் மகள் யாருடைய உதவியும் இன்றி அவளின் விருப்பம் போல் உணவைத் தவறாமல் எடுத்துக் கொள்வதே என்னுடைய நோக்கமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

  Also Read : 1970-யை சேர்ந்த இந்த படத்தில் எதிர்காலத்தில் இருந்து வந்தவர் யார்? 9 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

  அவரின் இந்த படைப்புக்கு ”மா ரோபோ” என்று பெயரிட்டுள்ளார். இதில் வாஸ் கன்டோரோல் போன்ற வசதியும் உள்ளது. மேலும் இந்த படைப்புக்குக் கோவா மாநில கண்டுபிடிப்பு கவுன்சில் நிதி உதவி வழங்க முன் வந்துள்ளனர். அந்த ரோபோவை மேலும் துரிதமாகச் செயல்படுத்த மற்றும் உற்பத்தி செய்தி உலக அளவில் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

  கவுன்சிலின் திட்ட இயக்குனர் சுதீப் ஃபல்தேசாய், இந்த ரோபோ கருவி பல மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரோபோ முழுமையாக முடிவு அடைந்த பின் அதற்கான விலை நிர்ணயிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Father, Goa, Robo