மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 25 வருடம் சிறை தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் தனது 13 வயது மகளை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். 2020ஆம் ஆண்டில் இந்த கொடுமை அச்சிறுமிக்கு நேர்ந்த நிலையில், அவரது செயல்பாடுகள் குறித்து அவரது தாய் மட்டும் பாட்டிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு மே மாதம் தான் தந்தை அந்த சிறுமிக்கு செய்த கொடுமையை பாட்டியிடம் விவரித்துள்ளார்.
ஆத்திரமடைந்த பாட்டி தனது பேத்திக்கு நீதி கிடைக்க வேண்டும் என தனது சொந்த மகனுக்கு எதிராகவே வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையின் போது பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், தனது தந்தை பல முறை வீட்டில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் இதை யாரிடமும் சொன்னால் அடித்து கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறினார்.
இந்த சம்பவத்திற்குப்பின் அச்சிறுமி வெளியே சென்று விளையாட, ஆண்களிடம் பழக பயந்துள்ளார் என சிறுமியின் வழக்கறிஞர்கள் கூறினர். அந்த நபரின் மனைவி குடும்ப தகராறு காரணமாக கணவனை விட்டு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துள்ளார் அந்நபர் தற்போது மூன்று குழந்தைகள், தாயாருடன் வசித்துவருகிறார். வழக்கறிஞரின் வாதத்தையும், சிறுமியின் வாக்குமூலத்தையும் கேட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரதி காலே, தந்தைக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க - இந்தியாவில் XE வேரியன்ட் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? மத்திய அரசு விளக்கம்
மேலும் அவர் தனது தீர்ப்பில் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். நீதிபதி தனது தீர்ப்பில், தந்தை என்பவர் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் அன்பின் அடித்தளமாக இருப்பவர். ஒரு தந்தை தனது மகளுக்கு தீங்கு நேரமல் பாதுகாக்கும் அரணாக செயல்படக்கூடியவர். ஆனால் இந்த வழக்கில் பெற்ற தந்தையே மகளுக்கு பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளார். சிறு வயதில் சந்தித்த வலி என்பது வாழ்நாள் வடுவாக மாறக்கூடியது. இருப்பினும் உரிய வழிகாட்டுதலுடன் இந்த சிறுமி நம்பிக்கையுடன் மீண்டுவருவார் என நீதிமன்றம் நம்புகிறது என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.