ஹோம் /நியூஸ் /இந்தியா /

மகள், மருமகனுக்கு புல்டோசரை திருமண பரிசாக தந்த தந்தை... உ.பியில் ருசிகரம்!

மகள், மருமகனுக்கு புல்டோசரை திருமண பரிசாக தந்த தந்தை... உ.பியில் ருசிகரம்!

திருமணத்திற்கு புல்டோசர் பரிசு

திருமணத்திற்கு புல்டோசர் பரிசு

உத்தரப் பிரதேசத்தில் யோகி அரசு அமைந்த பின்னர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் வீடுகள் உடமைகள் மீது புல்டோசர் கொண்டு இடிக்கும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மருமகனுக்கு திருமண பரிசாக புல்டோசரை வழங்கியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பொதுவாகவே சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ள மாநிலமாக உத்தரப் பிரதேசத்தின் மீது பிம்பம் பல ஆண்டுகளாக உள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் யோகி அரசு அமைந்த பின்னர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் வீடுகள் உடமைகள் மீது புல்டோசர் கொண்டு இடிக்கும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி குற்றவாளிகளுக்கு பயம் தரவே இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறிவருகிறார். இதனால், அவருக்கு புல்டோசர் பாபா என்று தொண்டர்கள் பெயர் வைத்துள்ளனர். இந்த புல்டோசர் மாடலை பல மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கின.

இந்த டிரெண்டை பார்த்து உத்தரப் பிரதேசத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது மகளின் திருமண பரிசாக புல்டோசர் இயந்திரத்தை பரிசாக தந்துள்ளார். அம்மாநிலத்தின் ஹமீர்பூர் பகுதியில் வசிப்பவர் பரசுராம் பிரஜாபதி. இவரின் மகள் நேகாவுக்கும் கடற்படை வீரரான யோகேந்திர பிரஜாபதிக்கும் சில நாள்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. பொதுவாக திருமண பரிசாக மாப்பிள்ளை மற்றும் பெண்ணுக்கு ஆடம்பர காரை தந்தை பரிசாக வழங்குவார். ஆனால், பரசுராம் தனது மகளுக்கு புல்டோசரை பரிசாக தந்துள்ளார்.

இந்த விநோத பரிசை அந்த ஊர் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். இந்த பரிசு தொடர்பாக பரசுராம் கூறுகையில், தனது மகள் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஒருவேளை தேர்வில் மகள் தோல்வி அடைந்தால், இந்த புல்டோசர் மெசினை வைத்து வருமானம் ஈட்டு அவர் வாழலாம் என்றார். தனது மாமனாரிடம் நாங்கள் எந்த வரதட்சணையும் கேட்கவில்லை என்று கூறிய மணமகன் யோகேந்திரா, அவர் தானே ஆசையாக முன்வந்து வித்தியாசமாக இந்த புல்டோசரை பரிசாக தந்துள்ளார் என குஷியாக கூறினார்.

First published:

Tags: Gift, Marriage, Uttar pradesh, Viral News